பிழையான நுழைவாயில்
![](https://eluthu.com/images/loading.gif)
எவருமறியா எம்கூற்றை சுவடுகளின்றி சுமந்துசெல்கிறேன்
தவறெனில் கம்பளம்பொதிந்து சவக்கிடங்கில் இறக்கிவைக்கிறேன்...
கிரகம்பல கண்டவெளி ஓர்கிரகம் நீர்பெருக்கி பகலவனின் கதிரிறங்கி துளிர்படற நிலமொதுங்கி
விரயம்பல உண்டமண்ணில் சார்ந்திருக்கும் ஈர்ப்புவிசையும் அகப்பொருளாய் மதியொளியும் ஒளிர்படரவே உலவும்பூமி...
ஆயிரமாயிரம் உயிர்களடக்கி அதனையாழ மனிதரைப் படைத்து
பாயிரமெழுதி பயின்றதனை வேதம்பிரித்து ஒற்றுமைகுலைத்து...
சினம்கொண்டு பதம்கண்டு வலம்வந்து களம்காண
இனம்பிரித்து மதம்பிரித்து நிலம்பிரித்து வளம்பிரித்து...
குருதியோடும் நீரோடை தென்றல்சுமக்கும் பிணவாடை
உருகியோடும் ஆரோன்தசை வன்மம்கொண்ட தணல்பிளம்பால்...
தேடியவிடைகள் தெருமுனையில் பாடியபாக்கள் பரணிவிளிம்பில்
வாடியமலர்கள் உருக்காலையில் நாடியநானும் துருவமுனையில்...
வேற்றுமொழி கண்டசிலர் தோற்றதில்லை என்றாகலாம்
கூற்றுப்படி உண்டகனியை போற்றுமிந்த தென்தமிழே...!