துயிலாத கனவு

துயிலாத கனவொன்று,
கரைதேடி
நீந்துதே!
தினம் தினம்
உறக்கங்கள் தொலைத்து!
மனமென்னும்
ஆழியிலே!

நீந்துகிற கனவது
மெய்த்திடும்
நாளிலே!
கண்கள்
மூடி முத்தெடுக்கும்
நாள் வரும்
உறக்கத்தின்
ஆழத்திலே!.

#துயிலாத_கனவு
#கார்த்திக் ஜெயராம்

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (13-Mar-18, 10:43 pm)
பார்வை : 1264

மேலே