கார்த்திக் ஜெயராம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திக் ஜெயராம்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  19-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2013
பார்த்தவர்கள்:  672
புள்ளி:  47

என்னைப் பற்றி...

தேடலை தேடிகொண்டிருக்கும் மாணவன் நான் ...

எழுத்தின் மீது விருப்பம் உண்டு...

அம்முவாகிய நான் - கார்த்திக் ஜெயராம்

முகநூல் https://www.facebook.com/kingofkarthikraja

என் படைப்புகள்
கார்த்திக் ஜெயராம் செய்திகள்
கார்த்திக் ஜெயராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2018 8:00 pm

ஆதியும் இன்றி
அந்தமும் இன்றி
தோன்றிய
உயிர்ப்பினை அது!

ஆர்ப்பரிக்கும்
ஆற்றிலிருந்து உருமாறிய
அமைதியான
ஏரி அது!

ஆனந்தத்தையும் அழுகையையும்
ஒருசேர தந்துணர்த்தும்
பக்குவம் அது!

கோவத்திலும்
குறையாத மௌனத்திலும்
நிறைந்திருக்கும்
அக்கறை அது!

சுயநலம் ஏதும் பாராது
பகிர்ந்திட்டு வாழும்
வாழ்வு அது!

உருகாத உணர்வுகளையும்
கரைபுரல ஓடவிடும்
பெருவெள்ளம் அது!

ஏக்கங்களையும் சோகங்களையும்
தீர்த்திடும் மாபெரும்
ஆனந்தம் அது!

தோல்விகண்டு துவண்டுவிழும்
மனதின் சோர்வு நீக்கும்
ஆற்றல் அது!

நெருடல்களுக்கிடையே தனித்திருந்தாலும்
புன்னகையால் கரைந்திடும்
மழைத்துளி

மேலும்

அருமை.... 04-Dec-2018 2:14 pm
கார்த்திக் ஜெயராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2018 7:49 pm

அடடா..!
இது என்ன துயரம்?

இரவு வந்த நிலவு
இருளுக்கு மட்டும்
சொந்தமில்லையே?

பகலிலே
நட்பு மாறுவதில்
இருளுக்கென துயரம்?

அன்பு யாருக்கு தான் சொந்தம் ?
விழுந்து உடைந்த மழைத்துளி
கரைந்த போன மேகத்திற்கும்,
உறிச்சிட்ட மண்ணுக்கும்
கூட சொந்தமில்லையே!

வீசுகின்ற வாசமது,
பிறப்பித்த மலருக்கும்
கலந்திட்ட காற்றுக்கும்
கூட சொந்தமில்லையே!

மனதிடம் பூத்திடும்
அன்பு
மட்டும் ஏன்
பிடித்தவரையே சார்ந்திருக்கிறது?

சார்ந்திருப்பு ஒரு நோய்
தோட்டத்தில் ஓர் பகுதியில் மட்டும்
உரமிட்டு என்ன பயன்?

மேலும்

கார்த்திக் ஜெயராம் - அனிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2018 12:56 am

முன்னறிவிப்பின்றி
வந்த முதல் காதல் நீ...
என் இதயம் ஏற்ற
முதல் உறவும் நீ...
கற்பனைக்குள் அடங்கா
ஒப்பனையற்ற
கவிதை நீ....
என்றும் என்றென்றும்
எந்தன்
முதலும் முடிவும் நீ...

மேலும்

நன்றி தோழர் 31-Oct-2018 1:41 pm
நன்றி தோழர் 31-Oct-2018 1:40 pm
கற்பனைக்குள் அடங்கா ஒப்பனையற்ற கவிதை நீ - அருமை 30-Oct-2018 7:38 pm
அருமை அருமை என்றும் என்றென்றும் எந்தன் முதலும் முடிவும் நீ... அருமை 26-Oct-2018 5:19 pm
கார்த்திக் ஜெயராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2018 5:05 pm

என்ன எழுதுவதென
யோசித்து யோசித்து
ஒன்றும் தோணாமல்
பேனாவை தூக்கி எறிந்துவிட்டு
செல்கிறேன்!

கவிதை பிறக்குமிடம்
வெற்றிடம்!

மேலும்

"கவிதை பிறக்குமிடம் வெற்றிடம்!" 👍 பிறந்து விட்டால் வெற்றியின் இடம். 19-Jan-2020 11:12 am
கார்த்திக் ஜெயராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2018 11:34 am

உனது
விருப்பு வெறுப்புகளை
பகிற தகுதியற்றவன்
என நினைத்தாயோ?
நின்
தனிமையில் வருந்துவது
நீ மட்டுமல்ல
உடைந்து போவது
நானும் தான்.!
நான்
சினங்கொள்வேன்
என நினைத்தே
பல தருணங்களில் ஒதுக்கப்பட்டிருக்கிறேன்
உன்னிடம்!
என்
கோபத்தை ஏற்க மறுக்கும்
உனக்கு என் பற்றுதல் புரிந்திடுமோ.?
மெய்யாய்
நீ இட்ட சண்டை
பொய்யாய்
கலகலத்த கதையென
எதுவும் இல்லை
நம் நட்பில். !
உன்மேல்
அக்கறையின்றி நானும்
என்மேல்
நம்பிக்கையின்றி நீயும்
ஒதுங்குவது

உயிருக்கு
ஒவ்வாது!

# மனதிடம் வினாவும் #புத்தி

- கார்த்திக் ஜெயராம்

மேலும்

உயிரோட்டமான வார்த்தைகள். உறவுகள் யாவும் வாழ்க்கையில் பெறுமதியானவை தான் அதில் நல்ல நண்பனின் பங்கு உயிரில் ஓர் அங்கம் போன்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 12:34 pm
கார்த்திக் ஜெயராம் - கதிர்நிலவன் நிலாரவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2018 10:42 pm

     நீயும் நானும்

நீ என்பது
நான் காணும் 'அவள்'

நான் என்பது
நீ காணும் 'அவன்'


நீ காணும் அவனில் 
நானும் 
நான் காணும் அவளில்
நீயும்
இல்லாதிருக்கலாம்

காண்பதில் என்ன இருக்கிறது...
நீ நீயாகவும்
நான் நானாகவும்
நம்மில் இயல்பாய்
ஏற்றுக் கொள்ளப்பட்டபின்.

நிலாரவி.

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 27-Feb-2018 2:10 pm
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. 27-Feb-2018 2:04 pm
அருமை 27-Feb-2018 9:26 am
நிதர்சனம் 26-Feb-2018 10:27 pm
கார்த்திக் ஜெயராம் - தமிழ்நேயன் அளித்த நூலில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2016 1:59 pm

பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை
' உடையார்'
ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்கு சோழ தேசம் கான வேண்டுமா? இராசராசனோடு வாழ வேண்டுமா? அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா? வா என்று கை பிடித்து அழைத்து போகிறார் ஆசிரியர், ஒரு அரசன் எப்படி இருப்பான் எப்படி பேசுவான் எப்படி நடப்பான் எப்படி உத்தரவு போடுவான் இத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.
சுந்தர சோழனுக்கு பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,
தமிழ்

மேலும்

நன்று சிநேகமாய் புதுயுகன் 20-Jun-2016 12:01 am
பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் சோழர்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை ' உடையார்' 15-Apr-2016 10:15 pm
கார்த்திக் ஜெயராம் - திலீபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2015 1:49 pm

கண்ணு ரெண்டும் காஞ்சு போச்சு... உம்மொகத்த காணாம...
பச்சதண்ணி அனலாச்சு... நெலா வெளிச்சம் நெருப்பாச்சு...
சோடிப்புறா நீயில்ல... எங்கூடும் இங்கில்ல...
எங்க புள்ள நீயிருக்க... உன் நெனப்புல தான் நானிருக்க...
இரகசியத்த சொல்லிபுடு... அதிசயத்த செஞ்சுபுடு..
பத்திரமா வச்சிருக்கேன் பாவிமக உம்மனச...
எம்மனச காணலியே... கொண்டுட்டு போயிட்டியே...
ஒறக்கமென உலகத்துக்கு... போயி ரொம்ப நாளாச்சு...
காத்துல தான் உன் வாசம்... அழகழகா கொஞ்சிப்பேசும்...
வாடுறனே பணவேரா... வந்துவிடு மழநீரா...
வாசமுள்ள ரோசாவே... சாகுறனே ராசாவே...
சத்தியமா சொல்லுறேன்டி... நித்தமும் உன நெனக்கிறேன்டி....
ஆசவெச்சேன் உன்மேல... பேச்ச

மேலும்

நன்றி சகா!! 04-Oct-2015 3:51 pm
சிறப்பு நண்பரே, தொடருங்கள் 04-Oct-2015 3:49 pm
நல்ல பாடல்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 2:53 pm
நன்றி சகா!!! 04-Oct-2015 2:01 pm
கார்த்திக் ஜெயராம் - மணிமாறன்இ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2015 5:37 pm

உதிரம்கூட
உறைந்து விடும்
உறைநிலை
வெப்பநிலையில் .....
எழுதுகோல் பிடித்து
எழுதுகிறேன்
உனக்காக ஒரு கவியை ...
ஒவ்வொரு வரியும்
என்னை
எரித்துக் குளிர்காய்கிறது....

மேலும்

தங்கள் வருகைக்கு நன்றி ..... 09-Oct-2015 2:02 pm
செம..நண்பரே.. 09-Oct-2015 7:56 am
வரவில்........மகிழ்கிறேன் .... 25-Jul-2015 4:07 pm
நன்றி நட்பே....... 25-Jul-2015 4:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (104)

அருண் குமார்

அருண் குமார்

நண்பர்களின் இதயங்களில்
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
இளவெண்மணியன்

இளவெண்மணியன்

காஞ்சிபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (107)

இவரை பின்தொடர்பவர்கள் (106)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
user photo

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே