சார்ந்திருப்பு

அடடா..!
இது என்ன துயரம்?

இரவு வந்த நிலவு
இருளுக்கு மட்டும்
சொந்தமில்லையே?

பகலிலே
நட்பு மாறுவதில்
இருளுக்கென துயரம்?

அன்பு யாருக்கு தான் சொந்தம் ?
விழுந்து உடைந்த மழைத்துளி
கரைந்த போன மேகத்திற்கும்,
உறிச்சிட்ட மண்ணுக்கும்
கூட சொந்தமில்லையே!

வீசுகின்ற வாசமது,
பிறப்பித்த மலருக்கும்
கலந்திட்ட காற்றுக்கும்
கூட சொந்தமில்லையே!

மனதிடம் பூத்திடும்
அன்பு
மட்டும் ஏன்
பிடித்தவரையே சார்ந்திருக்கிறது?

சார்ந்திருப்பு ஒரு நோய்
தோட்டத்தில் ஓர் பகுதியில் மட்டும்
உரமிட்டு என்ன பயன்?

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (30-Oct-18, 7:49 pm)
பார்வை : 197

மேலே