நிலவின் ஆசை

விண்னை தாண்டி குதிக்க
அந்த நிலவும்
ஆசை கொள்கிறான்...
நீ உறங்கும் போது
உந்தன் நெற்றி மேல்
பொட்டாய் வந்து விழ...

இரவு முழுவதும் முயற்சி செய்து
உன் நெற்றியில்
விழ முடியவில்லை என்றதும்;
காலை அவன் கவலையுடன்
வீடு திரும்புகிறான்
நீ கண் விழிக்கும் முன்னமே!!!

எழுதியவர் : சேக் உதுமான் (21-Oct-18, 8:54 pm)
Tanglish : nilavin aasai
பார்வை : 3804

மேலே