ஏஞ்சல் தேவா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஏஞ்சல் தேவா |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 15-Jul-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 281 |
புள்ளி | : 20 |
கனவுகள் நிறைந்த கற்பனை நான்.....
என்னவனே!
காதலில் சில சண்டைகளும்
சுகம் தான்
மழைக்குப் பின் வரும் மண்வாசனை போல்.
சண்டைக்குப் பின் வரும் சில
கெஞ்சல்களும் பல கொஞ்சல்களும்
மனதிற்க்கு என்றுமே சுகம் தான்.......
நிலவை
முழு நிலவைத் தரிசிக்க வேண்டும்
என்னவனின் தோள் சாய்ந்து
கை கோர்த்து நான்கு விழி வழியே ஓர் பிம்பமாய் தரிசிக்க வேண்டும்......
ஆதியும் இன்றி
அந்தமும் இன்றி
தோன்றிய
உயிர்ப்பினை அது!
ஆர்ப்பரிக்கும்
ஆற்றிலிருந்து உருமாறிய
அமைதியான
ஏரி அது!
ஆனந்தத்தையும் அழுகையையும்
ஒருசேர தந்துணர்த்தும்
பக்குவம் அது!
கோவத்திலும்
குறையாத மௌனத்திலும்
நிறைந்திருக்கும்
அக்கறை அது!
சுயநலம் ஏதும் பாராது
பகிர்ந்திட்டு வாழும்
வாழ்வு அது!
உருகாத உணர்வுகளையும்
கரைபுரல ஓடவிடும்
பெருவெள்ளம் அது!
ஏக்கங்களையும் சோகங்களையும்
தீர்த்திடும் மாபெரும்
ஆனந்தம் அது!
தோல்விகண்டு துவண்டுவிழும்
மனதின் சோர்வு நீக்கும்
ஆற்றல் அது!
நெருடல்களுக்கிடையே தனித்திருந்தாலும்
புன்னகையால் கரைந்திடும்
மழைத்துளி
என்னவனே!
தினமும்
காலை விடியலின் போது
இன்றாவது உன்னை காண்பேனா என்ற ஏக்கத்தில் தான்
எனது கண் இமைகள் நாட்களை துவங்குகின்றன...
என்னவனே!
தினமும்
காலை விடியலின் போது
இன்றாவது உன்னை காண்பேனா என்ற ஏக்கத்தில் தான்
எனது கண் இமைகள் நாட்களை துவங்குகின்றன...
எத்தனை கனவுகள் அன்பே
உன்னை எண்ணி......
அவற்றை எழுத வார்த்தைகளை
தேடி கொண்டிருக்கிறேன்....
உன்னை தேடுவது போல்.....
எழுத வார்த்தைகளையும்
அவற்றை வாழ உன்னையும்- தேடுகிறேன்
என்று தீரும் என் தேடல்........
இறைவன்
காதலில் ஒருவருக்கு வலியும்
ஒருவருக்கு சுகமும் என படைத்துவிட்டானோ?
வலிகளை நான் மட்டுமே
அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.....
வலிகள் ஆயிரம் இருந்தும்
சிரிக்கிறேன் என்னவன் அங்கு சுகம்
என்று எண்ணுகையில்........
காதல் வினா???
கண்ணீர்துளிகளில் மிதக்கும் அன்பை யார் சேகரிப்பார்??
மனவலிக்குள் புதைந்து கிடக்கும் காதலை தோண்டி எடுப்பவர் யாரோ??
தடுமாறும் நாவுகளில் தெறிக்கும் பாசச் சிதறல்களை கவர்பவர் யார்???
சிந்தை நிறைந்த அழகிய கனவுகளை மீட்டெடுப்பவர் யார்???
மீண்டும் மீண்டும் தோற்றுப்போய் இதயத்தில் அடைபட்ட ஆசை வாழ்க்கையை மீட்பவர் யார்???
காதலே என் காத்திருப்பிற்கு நியாயம் செய்...
இறைவன்
காதலில் ஒருவருக்கு வலியும்
ஒருவருக்கு சுகமும் என படைத்துவிட்டானோ?
வலிகளை நான் மட்டுமே
அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.....
வலிகள் ஆயிரம் இருந்தும்
சிரிக்கிறேன் என்னவன் அங்கு சுகம்
என்று எண்ணுகையில்........
பருவம் அறியாமல் காதல் விதைத்தாய் ;
பக்குவம் அறியாமல் வாட விட்டேன் !
சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்;
தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன் !
நிலா கண் கசக்கிய தேய்பிறை இரவில்,
நினைவுகளை ஏந்திய நீர் கசியும் விழிகள்
நீ வருவாயென வாயிலை நோக்கி.....
காலையில் சாப்பிடுவதற்கு
உப்புமா செய்யட்டுமாவென
ஆலைச் சங்கொலியாய்
அலறினாளென் மனைவி;
உப்பு சப்பு இல்லாத
உதவாக்கரை உணவதன்
பெயரைச் சொல்லிய அந்த
கணப் பொழுதில்
நெய்யோடு முந்திரியும்
தேங்காய் பற்களும்
கோங்கரா சட்டினியும்
சாம்பாரும் சேர்த்து
சிரித்த முகத்துடன்
சேர்ந்துண்ண அழைக்கும்
சித்தி லீலாவின்
சிவந்த வதனமும்
கண்டு பிடித்தவனைக் கண்டால்
மொத்து மொத்தென மொத்தனும்
என முக நூலில் முனைவர்
வினோத் கண்ணன் பதிவும்
விழுப்புரம் ரயில் நிலையத்தில்
டபராவைக் கரண்டியால்
தட்டி அழைக்கும் ஓசையில்
'கப்பு' 'கப்பு' என விழுங்கிடும்
சக பயணிகளின் காட்டேரிப்
பசியில் காலியாகி விடும்
கண்