காதல் வினா

காதல் வினா???

கண்ணீர்துளிகளில் மிதக்கும் அன்பை யார் சேகரிப்பார்??

மனவலிக்குள் புதைந்து கிடக்கும் காதலை தோண்டி எடுப்பவர் யாரோ??

தடுமாறும் நாவுகளில் தெறிக்கும் பாசச் சிதறல்களை கவர்பவர் யார்???

சிந்தை நிறைந்த அழகிய கனவுகளை மீட்டெடுப்பவர் யார்???

மீண்டும் மீண்டும் தோற்றுப்போய் இதயத்தில் அடைபட்ட ஆசை வாழ்க்கையை மீட்பவர் யார்???

காதலே என் காத்திருப்பிற்கு நியாயம் செய்...

எழுதியவர் : ஜான் (12-Oct-18, 4:40 pm)
Tanglish : kaadhal vinaa
பார்வை : 115

மேலே