சுகன்யா G - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சுகன்யா G |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 13-Apr-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 157 |
புள்ளி | : 7 |
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
உன்னோடு நான்
வாழ நினைக்கிறன்
ஆனால் நீயோ,
என் நெஞ்சை வாழை இலையாக
கிழித்து விட்டு செல்கிறாயே !!..... ஏன் ?
உன்னோடு நான்
வாழ நினைக்கிறன்
ஆனால் நீயோ,
என் நெஞ்சை வாழை இலையாக
கிழித்து விட்டு செல்கிறாயே !!..... ஏன் ?
Ovoru Nodi Pozhuthilum!!!!!!!!!!!!!
என் தோழியே ,
நான்
உன் மேல் வைத்த அன்பு
உனக்கு புரிந்தால் மட்டும்
போதும், ...
நீ என் மேல்
அதை திருப்பி காட்ட வேண்டிய
அவசியம் இல்லை..
ஏனெனில்,
என் அன்பு விற்பனைக்கு அல்ல....
2000 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் ஊரும், உறவும் ஒன்று கூடி நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆடம்பரமாக நடந்து முடிந்தது. மணப்பெண் கங்காவுக்கும், மணமகன் ராமுக்கும் புது வாழ்க்கை ஆரம்பமானது.
வீட்டில் இளையவன் ராம். ஒரு அக்காவும், அண்ணாவும் வெளியூரில் திருமணமாகி குடும்பத்தாேடு இருந்தார்கள். ராமுக்கு திருமணம் முடிந்ததும் அம்மாவும், அப்பாவும் அக்காவுடன் வெளியூருக்கு சென்று விட்டனர். கங்காவை தனது வீட்டிற்கே கூட்டி வந்தான் ராம். இருவரும் அரசாங்க உத்தியாேகம். காலையில் புறப்பட்டால் பாெழுதுசாய வீடு வந்து மிகுதி வேலைகளை முடித்து களைப்பாேடு தூங்கி எழ காலை புலர்ந்திடும். வாரம் ஒரு நாள் விடுமுறை நாளென்றாலும் ஏதா
விண்ணில் இருப்பதெல்லாம்
விண்மீனும் அல்ல
இரவில் மின்னுவதெல்லாம்
மின்மினியும் அல்ல
எனக்கு தெரிந்த
விண்மீனும், மின்மினியும்
உன் சிரிப்பு தான்....
காவிரி தீர்ப்பு முடிவா ...தொடக்கமா ?
------------------------------------------------------------
தாக்கிக்கொள்ளவோ ,அவதூறுகள் பேசிடவோ ,அறவழிப் போராட்டங்கள் நடத்தவோ நிச்சயம் நடைபெறாது என்றே நினைக்கிறேன் .காலம் ஒன்றே பதில் கூற முடியும் .மேலும் இதுவே முடிவின் முடிவா அல்லது மாற்றத்தின் தொடக்கமா என்றும் தெரியாது .அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் .
செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை தொலைக்காட்சிகளில் விவாதங்களில் வேண்டுமானால் இனி இந்த தலைப்பு வராமல் இருக்கலாம் .மேலும் நமது மக்கள் எதையும் எளிதில் மறந்துவிட கூடியவர்கள் .மாற்றுக கருத்து இல்லை .இந்த தீர்ப்பால் நாளையே காவிரி நீர் விரைந்து வந்து நம் எல்லையைத் தொட்டு பாய்ந்து ஓடி விவசாயிகளை விவசாயத்தை நாளை மறுநாளே வாழவைக்கும் என்றும் கூறமுடியாது. ஆனாலும் இந்த செய்தி ஒரு ஆறுதல் அளிக்கும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் .
விவசாயிகளின் முகம் மலர்ந்தால்தான் வாழ்கின்ற அனைவரின் அகமும் குளிரும் வயிறும் நிறையும் பஞ்சமும் வஞ்சமும் வாழ வழியின்றி தமிழ்நாட்டைவிட்டு விலகி ஓடும் .கடந்ததும் நடந்ததும் பாடமே தமிழக மக்களுக்கு . இனி யார் தேவையில்லை என்பதையும் யார் தேவை என்பதையும் தீர்மானிப்பார்கள் என்று நம்புகிறேன் .
ஒருபுறம் முதலமைச்சர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு என்கிறார். ஆனால் அதையே காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி யை பணிமாற்றம் செய்திருக்கிறார்.ஏன் இந்த இரட்டை வேடம் ?
யாரை ஏமாற்ற இந்த துரோக செயல் ?
நமது அடுத்த தலைமுறையை நினைத்து பாருங்கள்.
நமது உரிமைகளை பறிப்பதில் மத்திய அரசு குறியாக இருக்கிறார்கள். அதற்கு நீங்களும் உங்கள் அரசும் உதவியாக இருப்பது வரலாற்று பிழையாகி இருக்கிறது. இதுதான் உண்மை.மக்களும் சிந்திக்க வேண்டும். மாற்றம் வேண்டும் நாம் வாழ. நமது வருங்கால சந்ததியினர் வாழ்ந்திட.
தமிழ்நாட்டில் தமிழர்களே இல்லாமல் இருக்கும் நிலை வராமல் தடுக்க.உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தாய்வீடு , சொந்த மண் , இரத்த உறவு, நம்பிக்கை ஒளி தமிழ்நாடு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.