எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒருபுறம் முதலமைச்சர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு என்கிறார். ஆனால்...

ஒருபுறம் முதலமைச்சர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு என்கிறார். ஆனால் அதையே காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி யை பணிமாற்றம் செய்திருக்கிறார்.ஏன் இந்த இரட்டை வேடம் ?


யாரை ஏமாற்ற இந்த துரோக செயல் ?
யாரை திருப்திப்படுத்த இந்த துப்பாக்கிச் சூடு ?
மக்கள் உயிர் அவ்வளவு மலிவாகி விட்டதா ?
மக்களை காக்க வேண்டிய அரசாங்கம் இந்த காரியங்களை செய்ய துணிந்தது ஏன் ?

மறுபடியும் நீங்கள் மக்களை சந்திக்க வேண்டும் ஓட்டுக்களை பெற்றிட என்பதை மறந்து விட்டீர்களா ?உங்களை நம்பி வாக்களித்த மக்கள் எப்படி நம்புவார்கள் என்பதை ஒரு நொடி சிந்திக்க வேண்டாமா ?

இதை ஆளுங்கட்சியை சார்ந்த நண்பர்களும் யோசிக்க வேண்டும்.தமிழ்நாடு பாதாளத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
தமிழ்நாட்டில் தமிழர்களே இரண்டாந்தர குடிமக்களாக மாறி வருகிறோம் என்பதை நினைத்து பார்க்கும்போது இதயம் வலிக்கிறது. 
நமது அடுத்த தலைமுறையை நினைத்து பாருங்கள். 
இதோடு நமது இனம் , மொழி, தலைமுறை அழிவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.ஈழத்தில் தமிழர்க்கு ஏற்பட்டுள்ள நிலையை இன்று நீங்கள் உருவாக்கி வருகிறீர்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 

நமது உரிமைகளை பறிப்பதில் மத்திய அரசு குறியாக இருக்கிறார்கள். அதற்கு நீங்களும் உங்கள் அரசும் உதவியாக இருப்பது வரலாற்று பிழையாகி இருக்கிறது. இதுதான் உண்மை.மக்களும் சிந்திக்க வேண்டும். மாற்றம் வேண்டும் நாம் வாழ. நமது வருங்கால சந்ததியினர் வாழ்ந்திட. 

தமிழ்நாட்டில் தமிழர்களே இல்லாமல் இருக்கும் நிலை வராமல் தடுக்க.உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தாய்வீடு , சொந்த மண் , இரத்த உறவு, நம்பிக்கை ஒளி தமிழ்நாடு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி மக்களுக்காக தான் என்பதை மறந்து, மக்களுக்கு எதிராக எந்த ஒரு ஆட்சியும் அரசாங்கமும் நிலைத்து இருக்க முடியாது என்பதை உணர்ந்திட வேண்டும் ஆட்சியாளர்கள். 

மக்கள் விரோத அரசும் சட்டங்களும் ஆபத்தில் முடியும் அது யாராக இருந்தாலும் என்பது நடைமுறை விதி.


பழனி குமார்  

நாள் : 24-May-18, 6:53 pm

மேலே