எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காவிரி தீர்ப்பு முடிவா ...தொடக்கமா ? ------------------------------------------------------------ பல...

காவிரி தீர்ப்பு முடிவா ...தொடக்கமா ?
------------------------------------------------------------

பல ஆண்டுகளாக நடந்து வந்த உரிமைப்போர் சட்டத்தின் மூலமாக வழக்குகளின் வழியாக அது சரியோ ,தவறோ அல்லது குறை நிறை உள்ளதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டது .இந்த விவகாரத்தில் இனியும் ஒருவரை ஒருவர் 
தாக்கிக்கொள்ளவோ ,அவதூறுகள் பேசிடவோ ,அறவழிப் போராட்டங்கள் நடத்தவோ நிச்சயம் நடைபெறாது என்றே நினைக்கிறேன் .காலம் ஒன்றே பதில் கூற முடியும் .மேலும் இதுவே முடிவின் முடிவா அல்லது மாற்றத்தின் தொடக்கமா என்றும் தெரியாது .அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் .

காரணம் இந்த ஒரு பிரச்சினையோடு நமது வாழ்க்கை ,ஏன் தமிழ்நாட்டின் நிலையே மாற்றம் அடையும் என்று கூறுவதற்கில்லை .முற்றுப்பெறாத பல்வேறு பிரச்சினைகளும் தெளிவு கிடைக்காத பல குழப்பங்களும் இன்னும் இருக்கவே 
செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை தொலைக்காட்சிகளில் விவாதங்களில் வேண்டுமானால் இனி இந்த தலைப்பு வராமல் இருக்கலாம் .மேலும் நமது மக்கள் எதையும் எளிதில் மறந்துவிட கூடியவர்கள் .மாற்றுக கருத்து இல்லை .இந்த தீர்ப்பால் நாளையே காவிரி நீர் விரைந்து வந்து நம் எல்லையைத் தொட்டு பாய்ந்து ஓடி விவசாயிகளை விவசாயத்தை நாளை மறுநாளே வாழவைக்கும் என்றும் கூறமுடியாது. ஆனாலும் இந்த செய்தி ஒரு ஆறுதல் அளிக்கும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் .

இனி அடுத்தகட்டப் போர் துவங்கும் கட்சிகளின் இடையே ....இதை யார் கொண்டு வந்தது யாரால் பெற்றோம் என்று அவரவர் தன்னைத்தானே காரணமும் கூறுவார் .அது வர உள்ள தேர்தலுக்காக பிரச்சார உத்தியே தவிர வேறல்ல .வருக வருக விரைந்து வருக காவிரிப் பெண்ணே !

விவசாயிகளின் முகம் மலர்ந்தால்தான் வாழ்கின்ற அனைவரின் அகமும் குளிரும் வயிறும் நிறையும் பஞ்சமும் வஞ்சமும் வாழ வழியின்றி தமிழ்நாட்டைவிட்டு விலகி ஓடும் .கடந்ததும் நடந்ததும் பாடமே தமிழக மக்களுக்கு . இனி யார் தேவையில்லை என்பதையும் யார் தேவை என்பதையும் தீர்மானிப்பார்கள் என்று நம்புகிறேன் .

அதுமட்டுமல்ல ,இனி தமிழ்நாட்டை யார் ஆளப்போகிறார்கள் என்பதைவிட நாம் இனி அடுத்து யாரின் கீழ் வாழப்போகிறோம் என்பது சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய ஒன்றாகும் .நம்மால் யார் என்பதைவிட நமக்காக யார் என்பதை சிந்தியுங்கள் நல்ல முடிவு எடுங்கள் .

வரும்தலைமுறை வாழ வேண்டும் குறைகள் ஏதுமின்றி .

பழனி குமார்  

நாள் : 19-May-18, 7:13 am

மேலே