தீபி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தீபி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Sep-2017
பார்த்தவர்கள்:  819
புள்ளி:  29

என் படைப்புகள்
தீபி செய்திகள்
தீபி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2020 10:59 pm

மனப்பூர்வமாக
தேடுகின்றேன்
வாழ்க்கை நெடுக
வரப்போகிறவளை..!
தேவை என்று
பெரியதாக எதுவும் இல்லை..!
எதிர்பார்ப்பு குணம் மட்டுமே..!
நல்லவளாய் நான் போற்றும்
வல்லவளாய் இருந்தால்
அதைவிட வேறென்ன
வேண்டும்..!

மேலும்

அருமை... வாழ்த்துக்கள் 23-Jan-2020 1:26 pm
தீபி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2020 3:30 pm

என் கவலைகளை
எழுதி
உன்னையும்
கலங்கச்செய்ய
நான் விரும்பவில்லை..!
நீ நலமாக
வாழ்வாயென்று
வாழ்த்திவிட்டு
போய்விடுகிறேன்...!
என்னைப்பற்றிய
கவலையை
நீ விட்டுவிட்டு
உன் வாழ்க்கையை
அனுபவி..!
நான் நலமாகவே
மனநிறைவுடனேயே
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்..!
நீ பிரிந்தபோதும்
எங்கேயோ
வாழ்ந்துகொண்டிருக்கிறாய்
என்ற மகிழ்ச்சி
என்னை சமாதானப்படுத்தியது..!
இடையிலே வந்து
என் நிலையை
கண்காணித்து ஊக்கப்படுத்தியமைக்கும்
நன்றி...!
நான் உன்னை
மறக்க முற்படுகிறேன்..!
மறப்பேன் என்று
நம்புகிறேன்...!
வாழ்க வளமுடன்...!
வாழ்க நீடூழி..!
வாழ்க நின் நல்மனம்..!
வாழ்க...!

மேலும்

தீபி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2020 8:06 pm

உன்
பிடிவாதத்தை
நான்
பாராட்டியே
ஆகவேண்டும்...!
என்னிடமில்லாத
உறுதியான மனம்
உன்னிடம்
இருக்கிறதென்பதைக்
கண்டு நான்
நெகிழ்கிறேன்..!
என் மீதான
உன் அக்கறையோ
பரிதாபமோ
அதையும் நான்
பாராட்டியே
தீரவேண்டும்...!
காலம் கடந்தும்
என்னை தொடர்ந்துவரும்
உன் மனசாட்சியை
நான் பாராட்டியே
ஆகவேண்டும்..!
உனக்கு துரோகம்
செய்தபோதும்
என்னை மன்னித்துவிட்ட
உன் மனப்பான்மையிடம்
நான் மண்டியிட்டே
ஆகவேண்டும்..!
உன்னைக்
காதலித்தேன்
என்பதால்
உளமாற நான்
பெருமையடைய வேண்டும்..!

மேலும்

தீபி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2020 12:10 pm

நிலைக்காத
உறவொன்றை
தேடுவதில்
பயனென்ன..?
புரியாதோ
உனக்கு
என் விதியின்
சாராம்சம்..?
கடமைக்காக
வாழவேண்டிய
ஒரு பிறவி..!
பிறருக்காகவே
படைக்கப்பட்ட
ஒரு கருவி..!
விதியை
உணர்ந்தபிறகு
எதிர்பார்ப்பும்
ஆசையும்
எழுவது எங்கே..?
தனித்திருந்தே
சமூகத்தை
ஆளவேண்டுமென்பது
என் தலையிலெழுதிய
விதி..!
அதை வைத்தே
நான் தலைவனாக
தகுதியானவனாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்..!
புரிகிறதா..?
நடக்கவேண்டுமென்று விதி
இருந்தால் நடக்கும்..!
யார் தடுத்தும் எதுவும்
நிற்காது..!
நான் துணை
தேடுவதற்கு முன்பாக
என் பிறவிக் கடனை
அடைந்துவிடவேண்டும்..!
இல்லையென்றால்
எல்லோரையும் போல
சாதாரண வாழ்க்கையில்
உழல

மேலும்

தீபி - தீபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Dec-2019 1:33 am

உனக்காகத்தான்
எழுதுகிறேன்
தெரியுமா..?
காலங்கள் கடந்தாலும்
உன் குரலோசை
என் காதுகளில்
பிரதிபலிக்கின்றன..!
நீ பேசிய
வார்த்தைளை
நான் மறக்கவேயில்லை..!
நீ எழுதிய
மடல்களை
நான் தொட்டுப் பார்ப்பதுண்டு..!
உன் அன்பையும்
அக்கறையையும்
இழந்துவிட்டேனென
அழுவதுண்டு...!
என்னுள்ளிருந்த
காதல் பட்டுப்போவதை
மெல்ல மெல்ல
உணர்ந்ததுண்டு..!
எனக்கான
உலகத்தில்
நீ கனவாகிப் போனாய்..!
உனக்காகத்தான்
எழுதுகிறேன்
தெரியுமா..?
இத்தனை
ஆண்டுகளை
நீயில்லாமல்
கடந்தபோதெல்லாம்
தாயில்லாத குழந்தை
அடையும் வேதனையைப்போல
ஆயிரம் மடங்கு
வெந்ததுண்டு...!
உன்னிடத்தில்
வேறொருவரை
அமர்த்திக்கொள்ள
இது என்ன
வேலைவா

மேலும்

தீபி - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2019 4:09 pm

கண்ணாடி
சட்டத்திற்குள்

சிறைபட்ட

அழகான
கற்பனை

என் காதல்!

#கனவு

மேலும்

நன்றி 09-Feb-2019 12:22 am
அருமை 09-Feb-2019 12:08 am
நன்றி 08-Feb-2019 12:47 pm
அருமை 08-Feb-2019 11:06 am
தீபி - சிவா அமுதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2019 9:31 pm

மேகங்கள்...

வெயில் முகம் துடைக்கும்
வெள்ளை கைக்குட்டைகள்...

கண்ணாம்பூச்சி விளையாட்டில்
நிலா ஒளியும் மறைவிடங்கள்...

வானின் நீல சட்டையின்
வெள்ளை கறைகள்...

காற்று சுமந்து செல்லும்
சலவை மூட்டைகள்...

மலை முகடுகளின்
ஒப்பனை பொருட்கள்...

மழை சுமந்து போகும்
ஓட்டை பைகள்...

இயற்கை கிழித்தெறிந்த
வெள்ளை தாள்கள்...

வெள்ளை தேவதைகளின்
உதிர்ந்த சிறகுகள்...

தமிழ்ப்படங்களில் நாரதர்
சுமக்கும் புஷ்பவிமானங்கள்...

ஆகாயத்தின் ஓவிய கண்காட்சியில்
நகரும் ஓவியங்கள்...

மலை பிரதேசங்களில் தொட்டு கடக்கையில்
இயற்கை கொடுக்கும் ஈர முத்தங்கள்!!!

மேலும்

சரி தான்... நல்ல ரசனை.. 19-Feb-2019 9:36 pm
வெண்மை மேகம் சில்லறை வாங்காது . நீல வானம் வாங்கும் சில்லறைகளை (விண் மீன்களை ) மறைத்து வைக்கும் மூட்டைகள் அந்த மேகங்கள் என்ற கருத்தில் சொன்னேன் . அதை தாங்களும் யோசித்துப் பாருங்கள் சரியாக இருக்கும் 19-Feb-2019 6:33 pm
ஆமாம்.. மழை, அருவி, மேகங்கள் போன்ற இயற்கை செல்வங்களை ஆதி தொட்டு எழுதிக் கொண்டே இருக்கிறோம். தங்கள் கருத்துக்கு நன்றி கவின் சாரலன். 19-Feb-2019 10:09 am
மிக்க நன்றி ஐயா.. 19-Feb-2019 10:07 am
தீபி - சரண்யா கவிமலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2019 8:12 pm

சிலகணங்களுடன் போராடிப் பார்க்கிறேன்...,
அவை உன் சாயல்களற்ற பொழுதுகள்..!
என் இருட்டறைச் சிறு ஒளியாய் உன் பிம்பம்..!
என் வெள்ளைக் காகிதத்தில் கொள்ளை நிற கனவுகள் நீ..!
பிரிவின் சுமைகளுக்கு பிரசவம் இல்லை.., ஆம்..!
பிணமாய் மாறும் வரை என் இதயம் சுமக்கும் உன்னை..!

மேலும்

நன்றி 15-Feb-2019 2:01 pm
நன்றி 15-Feb-2019 2:01 pm
தங்கள் கருத்துகளுக்கு நன்றி 15-Feb-2019 2:00 pm
இதுவும் கடந்து போகும் வாழ்த்துகள் நிறைய எழுதுங்கள் 15-Feb-2019 1:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
அமலி அம்மு

அமலி அம்மு

கிருட்டிணகிரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே