மேகங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
மேகங்கள்...
வெயில் முகம் துடைக்கும்
வெள்ளை கைக்குட்டைகள்...
கண்ணாம்பூச்சி விளையாட்டில்
நிலா ஒளியும் மறைவிடங்கள்...
வானின் நீல சட்டையின்
வெள்ளை கறைகள்...
காற்று சுமந்து செல்லும்
சலவை மூட்டைகள்...
மலை முகடுகளின்
ஒப்பனை பொருட்கள்...
மழை சுமந்து போகும்
ஓட்டை பைகள்...
இயற்கை கிழித்தெறிந்த
வெள்ளை தாள்கள்...
வெள்ளை தேவதைகளின்
உதிர்ந்த சிறகுகள்...
தமிழ்ப்படங்களில் நாரதர்
சுமக்கும் புஷ்பவிமானங்கள்...
ஆகாயத்தின் ஓவிய கண்காட்சியில்
நகரும் ஓவியங்கள்...
மலை பிரதேசங்களில் தொட்டு கடக்கையில்
இயற்கை கொடுக்கும் ஈர முத்தங்கள்!!!