கண்ணீரும், கடல் நீரும்
மனிதன் கண்ணீரும் கடல்நீரும்
ஒக்குமே இரண்டும் உப்பை கரிக்கும்
இரண்டிலும் குணம் மாறாது
இன்பத்திலும், துன்பத்திலும்; ஆம்
மனிதன் அழுதாலும் சரி
ஆனந்தமாய் இருந்தாலும் சரி
அவன் கண்களில் கண்ணீர்
சுவைத்தாள் கடல் நீர்போல் கரிக்குமே
கடல் நீர் நிலாவோடும் உறவாடி
பெருமலையாய் ஆர்பரித்தாலும் சரி
சுனாமியாய்ப் பெருகிவந்தாலும் சரி
மற்றும் பல்லாயியிரம் வருடமாய்
அதில் சங்கமாகும் நதியோடு உறவாடினாலும்
ஒருபோதும் தன நீரின் சுவையில் குறைவதில்லையே