உண்மையில் நான் யார்

மலை முகட்டில்
மென் துளியாய் மிளிர்ந்தேன்
முன்பனி என்றாய்...

பின்
காலைக் கதிரில்
கரைந்து வான் சென்றேன்
கரு மேகமென்றாய்...

பெருங்காற்றோன்று
எனைத் தீண்டி
நான் மயங்கி பொழிந்ததனால்
மழைத் துளி என்றாய்...

மீண்டும் மீண்டும்
ஜனித்த என்னை
ஜீவநதி என்றாய்...
பெருங்கடல் என்றாய்...
சிறுதடாகம் என்றாய்...
ஒரு முறை என்னை
சாக்கடை எனவும் இகழ்ந்தாய்...

உண்மையில் நான் யார்?

எனைப் பிரித்தால்
தனிமங்களாவேன்...
உற்று நீ நோக்கினால்
அணுக்களாவேன்...
பின் எனைப் பிளந்தால்
பிரளயமே மூலமான
பேராற்றலாவேன் ...
பின் ஏதுமில்லா வெற்றிடமாவேன்...

நீயும் அப்படித்தான்...
குழந்தையானாய்
குமரனனாய்...பின்
கிழவனும் ஆனாய்...

உனைப்பிரித்தாலும்
தனிமங்களாவாய்..
அணுக்களாவாய்..
பின் வெற்றிடமமும் ஆவாய் ..
ஆக
அஃறிணைக்கும்
உயர்திணைக்கும்
அணுவளவே வித்தியாசம்...

எழுதியவர் : சி. பிரபாகரன் (9-Feb-19, 10:38 pm)
சேர்த்தது : சி பிரபாகரன்
Tanglish : unmaiyil naan yaar
பார்வை : 301

புதிய படைப்புகள்

மேலே