என் பெயர் “சின்னத்தம்பி”
தடம்
தெரியவில்லை
இடம்
புரியவில்லை
தகிக்கின்றது
என் வீடு போலில்லை
புகை மண்டலம்
இரைச்சல்...
பசி...
எனக்கான
உணவில்லை
நீரில்லை…
நடக்கின்றேன்
நடக்கின்றேன்....
தீப்பந்தங்கள்
வெறுப்பேற்றுகின்றன...
வெறியூட்டுகின்றன...
என் பெயர்
“சின்னத்தம்பி”