அருள்Mவர்மன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அருள்Mவர்மன்
இடம்:  சிதம்பரம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Oct-2018
பார்த்தவர்கள்:  86
புள்ளி:  21

என்னைப் பற்றி...

மழைக் காதலன்

என் படைப்புகள்
அருள்Mவர்மன் செய்திகள்
அருள்Mவர்மன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2019 11:35 am

ஓட்டு எந்திரம்
எங்கள்
ப்ளே-ஸ்டேஷன்
சட்டமன்றம்
எங்கள்
விளையாட்டு
மைதானம்

தொழிற்சாலை
கழிவு
எங்கள் பிறப்புரிமை

மணலும்
க்ரானைட்டும்
எங்கள்
பொதுவுடமை

”கேட்கத்தான் நாதியில்லை
கேட்பவருக்கு உடல்கூட
மிச்சம் இருப்பதில்லை”

மேலும்

நன்று! மென்மேலும் வளர்க! 06-May-2019 12:47 pm
அருள்Mவர்மன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2019 11:32 am

தடம்
தெரியவில்லை
இடம்
புரியவில்லை

தகிக்கின்றது
என் வீடு போலில்லை
புகை மண்டலம்
இரைச்சல்...

பசி...
எனக்கான
உணவில்லை
நீரில்லை…
நடக்கின்றேன்
நடக்கின்றேன்....

தீப்பந்தங்கள்
வெறுப்பேற்றுகின்றன...
வெறியூட்டுகின்றன...
என் பெயர்
“சின்னத்தம்பி”

மேலும்

அருமை... 11-Feb-2019 9:58 pm
அருள்Mவர்மன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2018 9:20 am

கருவாட்டைக்
காயவச்ச
சிறுவாட்டுக்
காசையெல்லாம்
புயல்கொண்டுப் போச்சே…

குதறப்பட்ட
தென்னங்கீற்றாய்
எம் உறைவிடமும்
ஆச்சே…

காரிருள்
நாளில்
ஏற்ற
ஒரு விளக்கும்
இல்லை…

”விலக்கு
நாளில்
வைக்க
நல்ல
துணிகூட
மிச்சமில்லை…”

மேலும்

அருள்Mவர்மன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2018 8:42 pm

கடல்தனைக்
கையேந்தினோம்
வலைகூட
மிஞ்சவில்லை…

வயல்தனை
கையேந்தினோம்
இலைகூட
மிச்சமில்லை…

யாரைத்தான்
கையேந்துவது?

”அடுத்தவேளை
கஞ்சிக்கு???”

மேலும்

அருள்Mவர்மன் - அருள்Mவர்மன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2018 1:23 pm

தேவாலயங்களும்
மசூதிகளும்
கோவில்களும்
மனதிற்கு
நிம்மதியைத்
தருவதற்கேயன்றி
மனச்சோர்வினையும்
உடல்வேதனையையும்
தருவதற்கல்ல…
சிவனோ க்ருஷ்ணனோ
இயேசுவோ நபிகளோ
யாராயினும்...

மேலும்

நன்றி.இனி இன்னும் நன்கு எழுதுவேன் 31-Oct-2018 2:16 pm
உங்கள் எண்ணம் நன்று, இதனை எண்ணப்பகுதியில் எழுதியிருக்கவேண்டும். இன்னும் நன்கு எழுத நல்வாழ்த்துகள்! 31-Oct-2018 1:32 pm
அருள்Mவர்மன் - அருள்Mவர்மன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2018 8:51 pm

டவுசர் போட்டக்
காலந்தொட்டு
கோட்டிப்புல்லும்
கோலிக்குண்டும்
மரமேறி பனங்காய் வெட்டி
அம்மணக்கட்டையாய்
ஆற்றில் குளித்த நண்பர்கள்
இன்று வெகுதொலைவில்…

மேலும்

அருள்Mவர்மன் - அருள்Mவர்மன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2018 8:58 pm

மழைக்காலக்
காத்திருத்தல்
சுகமானது…
சாலையோர
குறுங்கப்பல்கள்
பள்ளிக்கால
மழை-விடுமுறைகள்
அலாதியானவை…
கல்லூரியில்
பைக்கின்
மழை நனைதல்கள்
கலர்புஃல் தேவதைகள்…
சடுதியில்
சிலீரென்ற சாரலாய்
முகத்திலறைகிறது மழை…
உன் நினைவுடன்
மழையில் நனைந்து
மழையை அணைத்து…
மழையில் கரைந்தேன்…

மேலும்

அருள்Mவர்மன் - அருள்Mவர்மன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2018 9:09 pm

சலனமில்லா இலை…

அந்திமக் காலத்தை
நினைவூட்டும் இருள்…

அமைதியாய்
ஒற்றை வானம்…

விழியோரம்
நீர்ப்படலம்…

நீ எங்கே?

மேலும்

அருள்Mவர்மன் - அருள்Mவர்மன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2018 9:18 pm

என் ஒற்றை நிலா
உலகத்தில்…
ஒளியை மறைக்கும்
கறுமேகக் கூட்டம்…
ஒரு மலைமுகடு…
பறந்து செல்லும்
ஆன்மா…

மற்றும்
நான்…

தனியே…

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே