மறவா நாட்கள்

டவுசர் போட்டக்
காலந்தொட்டு
கோட்டிப்புல்லும்
கோலிக்குண்டும்
மரமேறி பனங்காய் வெட்டி
அம்மணக்கட்டையாய்
ஆற்றில் குளித்த நண்பர்கள்
இன்று வெகுதொலைவில்…
முதல்நாள் குச்சிஐஸ்
சாப்பிட்டுவிட்டு
மறுநாள்
விபத்தில் இறந்த நண்பன்
கல்லூரியில்
இனிக்க இனிக்க
பேசியத் தோழிகள்
விடிய விடிய சரக்கடித்து
மட்டையாய்ப் போன
நண்பன் வீட்டு மொட்டை மாடி
அனைத்தும் இன்று
கலைந்துப் போனக்
கனவாய்…

நீ மட்டும்
நெஞ்சில் நிற்கிறாய்
பெரும் நினைவாய்..!

எழுதியவர் : அருள்.M.வர்மன் (30-Oct-18, 8:51 pm)
சேர்த்தது : அருள்Mவர்மன்
Tanglish : maravaa nadkal
பார்வை : 126

மேலே