சாயம் போகாத விவசாயம்

விதையே
உன்னை புதைத்து
கண்ணீர் விட்டேன்
நீ
மீண்டு வர வேண்டும் என்று

நீ துளிர் விட்டாய்
உன் சுற்றத்தாரை
களை எடுத்தேன்
உன் வளர்ச்சியை தடுப்பார்கள்
என்றெண்ணி

உனக்கு உரமும் நீரும்
பாய்ச்சினேன்
நான் கஞ்சி காய்ச்சி உண்டு

என் உழைப்பில்
வளர்ச்சி உனக்கு

தளர்ச்சி இல்லை எனக்கு

மனதில் சந்தோசம் நிறைய
வயிறு மட்டும் நிறையல

மகசூல் இருந்தும்
சேமிப்பு எனக்கில்ல

உன் ஆயுசு முடிந்து போனது
என் உசுரு ஊஞ்சலாடுது தினமும்

மழையே
நீ பொழிவாய் மும்மாரி

கண்ணீரை பொழிகிறேன் நான் மாறிமாறி

எர் புடிக்க தெரிந்த
என் கைகளுக்கு

ஏடு புடிக்க மறந்த
என் கண்களுக்கு

போட தெரியல
லாப கணக்கு

உன் சுற்றலில் தான்
பூமி தாய் மெல்ல உறங்குகிறாள்

கண் விழிக்கும் போது
இந்த உலகம் மரணிக்கும்
ஒரு நாள்
உனக்கு தோள் கொடுத்து

இந்தஉலகம் மரணித்து
விட கூடாது என்று நீயும்
உழைக்கிறாய்

கடைசியில் நிலைப்பது யாரோ

கை மாற்றி விட்டவனெல்லாம்
சொகுசாய் வாழ

கை கொடுத்த நீ மட்டும்

ஓலை பின்னி கொண்டு இருக்கிறாய்
உன் வீட்டு கிழிந்த கூரையை மாற்ற

கோவணம் உன் மானம்
காக்கும்

கோவம் உன் மனசுல எங்கு இருக்கு

உன் புன்னகையே
எனக்கு நம்பிக்கை

தன்னபிக்கையை தேடி உன்னை கடந்து
பாடம் படிக்க ஓடுது பல மைல் தாண்டி
ஒரு கூட்டம்

பதுக்கி வைத்த பணம் எல்லாம் காய்ந்து விட
நீ புதைத்த விதையில் விருட்சம் அடைந்த
இந்த உலகம்
இன்று வரை உயிர் வாழுதடா

உனக்கு என்று விமோச்சனம்
தெரியல

மீண்டும் ஏர் பிடிக்க
அரை கோவணத்தோடு நீயும்
பசி மயக்கத்தில் நானும்

மெல்ல நடை போடுகிறோம் ............

எழுதியவர் : SENTHILPRABHU (30-Oct-18, 11:00 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
பார்வை : 1999

மேலே