வாழ்வே நடிப்பு
மேடையில் நடிப்பு
திரையில் நடிப்பு
பேச்சில் நடிப்பு
காதலியுடன் கொஞ்சும்போது
பேசும் மொழிகளில் நடிப்பு
மக்களை மயக்கும் மேடைப்பேச்சில் நடிப்பு
வாழும்போது வாழ்வின் ஒவ்வோர் அங்கமும் நடிப்பு
குழந்தையாய் மழலைப்பேசி சிறிது வரும்போது
மட்டுமே வாழ்வில் இயல்பு தெளிவு.