பேரன்பு

ஆதியும் இன்றி
அந்தமும் இன்றி
தோன்றிய
உயிர்ப்பினை அது!

ஆர்ப்பரிக்கும்
ஆற்றிலிருந்து உருமாறிய
அமைதியான
ஏரி அது!

ஆனந்தத்தையும் அழுகையையும்
ஒருசேர தந்துணர்த்தும்
பக்குவம் அது!

கோவத்திலும்
குறையாத மௌனத்திலும்
நிறைந்திருக்கும்
அக்கறை அது!

சுயநலம் ஏதும் பாராது
பகிர்ந்திட்டு வாழும்
வாழ்வு அது!

உருகாத உணர்வுகளையும்
கரைபுரல ஓடவிடும்
பெருவெள்ளம் அது!

ஏக்கங்களையும் சோகங்களையும்
தீர்த்திடும் மாபெரும்
ஆனந்தம் அது!

தோல்விகண்டு துவண்டுவிழும்
மனதின் சோர்வு நீக்கும்
ஆற்றல் அது!

நெருடல்களுக்கிடையே தனித்திருந்தாலும்
புன்னகையால் கரைந்திடும்
மழைத்துளி அது!

சில்லுசில்லாய் உடைகின்ற பொழுதும்
தன்னை முழுதும் பிரதிபலிக்கும்
தேடல் அது!

தான் தேடிய தேடலில் தோற்றிருந்தும்!
தன்னை தேடும் தேடல்களுக்கு
வரம் அது!

#பேரன்பு

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (30-Oct-18, 8:00 pm)
பார்வை : 616

மேலே