மழைக்காலம்

மழைக்காலக்
காத்திருத்தல்
சுகமானது…
சாலையோர
குறுங்கப்பல்கள்
பள்ளிக்கால
மழை-விடுமுறைகள்
அலாதியானவை…
கல்லூரியில்
பைக்கின்
மழை நனைதல்கள்
கலர்புஃல் தேவதைகள்…
சடுதியில்
சிலீரென்ற சாரலாய்
முகத்திலறைகிறது மழை…
உன் நினைவுடன்
மழையில் நனைந்து
மழையை அணைத்து…
மழையில் கரைந்தேன்…