ஞாலத்தில் வழக்கமது
காலத்தின்
கோலமென
காலமும்
புலம்புவதே
ஞாலத்தில்
வழக்கமது...
பழிசுமத்தும்
பழக்கமும்
பாரினில்
பழகிப் போனது...
பகுத்தறிவு
சிந்தனைகள்
பழுதடைந்து
போனதால்
சிந்தையது
சிதிலமடைந்து
எண்ணங்கள்
திசைமாறி
செயல்கள்
செயலிழக்குது...
தடுமாறும்
உணர்வுகளால்
தடம் மாறுது
பயணிக்கும்
பாதையதுவும்...
கற்றிடுக
வகைப்படுத்தி
வாழ்ந்திட ,
பெற்றிடுக
பேருவகையும்
பெருமையும்...
பழனி குமார்
30.10.2018