நல்ல துணிகூட மிச்சமில்லை…”

கருவாட்டைக்
காயவச்ச
சிறுவாட்டுக்
காசையெல்லாம்
புயல்கொண்டுப் போச்சே…

குதறப்பட்ட
தென்னங்கீற்றாய்
எம் உறைவிடமும்
ஆச்சே…

காரிருள்
நாளில்
ஏற்ற
ஒரு விளக்கும்
இல்லை…

”விலக்கு
நாளில்
வைக்க
நல்ல
துணிகூட
மிச்சமில்லை…”

எழுதியவர் : அருள்Mவர்மன் (2-Dec-18, 9:20 am)
சேர்த்தது : அருள்Mவர்மன்
பார்வை : 74

மேலே