சி பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சி பிரபாகரன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 15-Jun-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2019 |
பார்த்தவர்கள் | : 297 |
புள்ளி | : 9 |
நினைவலை
நிழல் தவிர்த்த வெளிகளை
அடைத்து நிறைத்திருக்கிறது வெயில்..
பாரபட்சம் பாராமல் எவ்விடமும்
சுழன்றடிக்கிறது காற்று..
புழுதியுடன் பறக்கிறது
பறவைகள் உதிர்த்த மென்னிறகுகள்
உடைமர முட்கிளையிடை
கூடு கட்டுகின்றன காடை, கவுதாரிகள்
காளைகளின் கழுத்து மணியோசையுடன்
நகர்கிறது மாட்டு வண்டி
சாணியள்ளி கூடை நிரப்புகிறாள் ஒரு பெண்
ஒய்யாரமாய் வெளித்திண்ணையில்
ஒய்வெடுக்கிறது ஒரு நாய்
சிறு உறுமலுடன் நிறைய குட்டிகள்
பின் தொடர ஓடிச்செல்கிறது தாய்ப் பன்றி..
தடதடக்கும் மின்சார ரயிலின் ஓசையில்
திடுக்கிட்டு விழிக்கிறேன்
சுகக்கனவைத் தொலைத்து….
பயணத்தின் போது
நிலா தன்னுடனே
வருகிறதென்று
சிரித்து ரசிக்கும்
குழந்தையின் முகத்தில்
தெரிகிறது
பல நூறு நிலாக்கள்…
இரட்டை விழிகளும்
இணைசேர்ந்த புருவங்களும்
என்னை இழுக்குதடி...
எட்டநின்று எள்ளாதே!
சுட்டுவிரல் அசைவு போதும்
மட்டிலா என்னன்பை
மழையாய்ப் பொழிந்திடவே...
~ தமிழ்க்கிழவி
எல்லாப் படிமங்களிலும் நீதான்
என் கனவுச் சாயல்களைக் கவர்ந்து
கடை விரிக்கிறாய்...
விலை கேட்டு பேரம் பேசி வியர்க்கிறேன்...
விடுவதாகவும் இல்லை விற்பதாகவும் இல்லை...
விடிய விடிய விழித்து சிவந்த கண்ணுக்கு
நந்தியாவட்டையாவது கொடு...
ஒற்றி எடுப்பது உன்பாடு...
பொருள் சேர்ப்பதே உன் பொழுது...
பொருளும்,பொழுதும்
நான்தான் என்பது என்றுதான் விளங்குமோ...
இன்னுமா கடையில்...!!!
காலை வணக்கம் ......
அத்தி மரம் பூத்திருக்க
அந்தி வானம் மயங்கி நிற்க
அல்லி அவளுக்காக காத்து நிற்க...
தாணி மரந்தாடி
தாழை மலர் சூடி
தும்பையவள் வருஞ்சேதி
தூக்கணாங்குருவி சொல்லிப்போனதே...
பறவையெல்லாம் கூடேர
எருமையெல்லாம் வீடேர
கருப்பட்டியா சேதிவருமென
கானாங்கோழியோடு நான் காத்திருக்க
கன்னியவள் எப்படியொ காண வந்தாளே...
ஆவலாக நான் காத்திருக்க
அரளியை நெஞ்சில்
அரைத்துச்சென்றாளே...
கன்டாங்கி கொசுவம்போல
என்ன கசக்கி போனாளே...
கள்ளிப்புறா என்னை
காடையாக்கிச்சென்றாளே....
கருவேலங்காடைகளே
கருநாரைக் குஞ்சுகளே
காற்றாய் நான் இருந்தால்
மரத்திடம் நான் அழுவேன்
மரமாய் நான் இருந்தால்
மண்ணிடம் முறையிடுவே
மெலிதாய் ஒரு தென்றல்
பின்னொரு ஈரக்காற்று...
முழுமையாய் அதனுள் நான்
அமிழ்ந்து விடுமுன்
சடசடவென சடசடத்தன
சின்னச் சின்னதாய் தூறல்கள்...
வியர்வை விழுங்கிய
எச்சமாய் இருந்த என் கன்னங்ளை
முதலில் சூடாக்கி
பின் குளிராக்கி
வழிந்து சென்றது மழைத்துளி...
மயக்கம் தெளியும் முன்
எனை நீங்கிச் சென்ற
இந்திரலோகக் காதலி போல...
பதட்டம் கொண்டேன்
பதறிக் கேட்டேன்
ஏன் அவசரம் என்றேன்...
பெண்ணும் நானும் ஒன்றே
எனத் தூறிச் சிரித்தன தூறல்கள்...
விண்மீன்கள் கோடியுண்டு
விண்ணகரம் ஒன்றுதான்...
கோலங்கள் பல உண்டு
பூலோகம் ஒன்று மட்டும்...
மேகங்கள் பல உண்டு
ஆகாயம் ஒன்றுதான்...
உன் அடையாளத்தை வாழ்க்கை முழுதும்
வேறொருவனிடம் தேடிக்கொண்டிருக்கிறாய்
ஒன்றை அறிவாயா...
உன் எண்ணங்கள் பலரின் பிம்பம் ஆகலாம்
பலரது எண்ணங்கள் உன்னுள் உறைந்தும் விடலாம்...
ஆனால்
உன்னை நீயே பிறரின் பிம்பமாக்கி கொள்ளாதே....
உன் உளி கொண்டு உன்னையே நீ செதுக்கிக் கொள்
இன்னொருவன் உளியில் நீ அழகாய் இருப்பதை விட
உன் உளியால் சற்றே நெளிவாய் இருப்பது மேல்...
தீவிரவாதம்
தன் அகோரத்தை
அழகாய் அரங்கேற்றி
மனிதத்தை
மண்ணொடு மண்ணாக்கி
வன்மையை உணர்த்திய தருணம்...
அது
புத்தரும் யேசுவும் நபியும்
ஒன்றாய் கூடி அழுதிட்ட தருணம்....
எத்தனை முறை நான்
சிலுவை ஏறினால் இவர்கள்
இரக்கம் கொள்வர்
என ஏங்கினார் ஏசு....
இவர்கள் பாவங்களை எல்லாம்
நான் சுமந்தால்
இனியேனும் மனிதம் கொள்வரா
என வினவினார் அல்லாஹ்...
இன்னொரு முறை
போதியில் அமர்ந்தால்
அமைதி கொள்ளுமோ
அகிலம் என்றார் புத்தர்...
எதையுமே உணராத தீவிரவாதமே மனிதத்தின் தீரா வாதமே
இப்படியே போனால்
இன்னொரு காந்திக்கு
நான் எங்கே போவேன்...