கருவேலங்காடைகளே
அத்தி மரம் பூத்திருக்க
அந்தி வானம் மயங்கி நிற்க
அல்லி அவளுக்காக காத்து நிற்க...
தாணி மரந்தாடி 
தாழை மலர் சூடி
தும்பையவள் வருஞ்சேதி
தூக்கணாங்குருவி சொல்லிப்போனதே...
பறவையெல்லாம் கூடேர 
எருமையெல்லாம் வீடேர 
கருப்பட்டியா சேதிவருமென
கானாங்கோழியோடு நான் காத்திருக்க
கன்னியவள் எப்படியொ காண வந்தாளே... 
ஆவலாக நான் காத்திருக்க
அரளியை நெஞ்சில்
அரைத்துச்சென்றாளே...
கன்டாங்கி கொசுவம்போல
என்ன கசக்கி போனாளே...
கள்ளிப்புறா என்னை
காடையாக்கிச்சென்றாளே....
கருவேலங்காடைகளே
கருநாரைக் குஞ்சுகளே 
காற்றாய் நான் இருந்தால்
மரத்திடம் நான் அழுவேன் 
மரமாய் நான் இருந்தால்
மண்ணிடம் முறையிடுவேன் 
மனுசனாகிப் போனேனே...
என் மனசாற 
யாரிடம் நான் போவேனே...
 
                    
