என் அன்பு கனவா
கண் இமைக்கும் நொடியில் கனவாக வந்தாய்
என்று நினைத்தேன் ஆனால் ,
என் கணவனாக வந்தாய்
துள்ளித்திரியும் சிறுவயதிலிருந்து
பருவமடைந்த பெரும் வயது வரை
நான் கனவாக நினைத்ததை நினைவாக்கினாய்
மணக்க மனம் பிடித்தாய் என்று நினைத்தேன்
ஆனால், என் மனதைப்பிடிக்க மணந்தாய்
என்று புரிந்துகொண்டேன் .
சொட்டும் உன் தேன் சுவை பேச்சுக்கள்
என் சோகங்களையும் சிதறடிக்கின்றன
கால காலமாய் உன் கூட வாழ வேண்டும்
என்று ஆசை இல்லை .என்
கடைசி மூச்சி வரை உன் காதலோடு வாழ வேண்டும்
என்று ஆசை .......
என் அன்பு கனவா .......

