தூறல்கள்

மெலிதாய் ஒரு தென்றல்
பின்னொரு ஈரக்காற்று...
முழுமையாய் அதனுள் நான்
அமிழ்ந்து விடுமுன்
சடசடவென சடசடத்தன
சின்னச் சின்னதாய் தூறல்கள்...

வியர்வை விழுங்கிய
எச்சமாய் இருந்த என் கன்னங்ளை
முதலில் சூடாக்கி
பின் குளிராக்கி
வழிந்து சென்றது மழைத்துளி...
மயக்கம் தெளியும் முன்
எனை நீங்கிச் சென்ற
இந்திரலோகக் காதலி போல...

பதட்டம் கொண்டேன்
பதறிக் கேட்டேன்
ஏன் அவசரம் என்றேன்...

பெண்ணும் நானும் ஒன்றே
எனத் தூறிச் சிரித்தன தூறல்கள்...

எழுதியவர் : சி. பிரபாகரன் (18-Feb-19, 10:33 pm)
சேர்த்தது : சி பிரபாகரன்
Tanglish : thoralgal
பார்வை : 311

மேலே