பத்மநாபபுரம் அரவிந்தன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பத்மநாபபுரம் அரவிந்தன்
இடம்:  பத்மநாபபுரம்
பிறந்த தேதி :  05-Jul-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2018
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் கடலில் பணியாற்றும் மாலுமி. பல கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கணையாழி, படித்துறை, திண்ணை, திணை, ஆனந்த விகடன் போன்றவற்றில் என் கதைகள், கவிதைகள் வெளிவந்திருக்கிறது. 'விரிசலுக்குப் பிறகு' என்ற தலைப்பில் என் கவிதைத் தொகுப்பு ' வம்சி புக்ஸ்' வெளியீடாக வந்தது. பத்மநாபபுரம் அரவிந்தன் என்ற பெயரில் என் படைப்புகள் வெளி வருகின்றன.

என் படைப்புகள்
பத்மநாபபுரம் அரவிந்தன் செய்திகள்
பத்மநாபபுரம் அரவிந்தன் - Balaji Prasanna அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2019 1:53 pm

'அவன் காட்டை வென்றான்' கதையின் காடு என்னை பிரமிக்க வைத்தது. அந்த கிழவனோடு நானும் பன்றி மீட்க காட்டினுள் சென்றது போன்ற உணர்வை ஒரு இரவுகதையாக என் பிள்ளைகளிடம் விரித்தேன்.

'அப்பா எனக்கு mario கத சொல்லு.. இல்லல்ல fast and furious part 8 சொல்லுப்பா please ப்பா..' - இராகவன்.

'டேய்.. அப்பாக்கு டென்ஷன் குடுக்காத.. அப்பா பேய் கதையே சொல்லுவாங்க.. செமையா பயமா இருக்கும். நீ terror கதையா சொல்லுப்பா' - மாதவன்.

'டேய்.. யப்பா தங்கமணிங்களா, அப்பாக்கு பேய்கதயெல்லாம் தெரியாது. வேணும்னா ஒரு பன்னி கத இருக்கு சொல்றேன்..'

'யப்பா, பன்னிலாம் வேணாம்ப்பா. முயல், அணில் மாதிரி சொல்லு'

'இல்லப்பா நீ சிங்கம்,

மேலும்

பத்மநாபபுரம் அரவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2019 10:49 am

ஒரு மயிலிறகின் வருடலைப் போல
பட்டாம் பூச்சியின் ஓசைகளற்ற
சிறகசைப்பினைப் போல

முயலொன்றின் முதுகினைத்
தடவுவதைப் போல
பூவொன்று காம்பிலிருந்து
தரையுதிரும் மவுனத்தைப் போல

ஒரு சிறு மீனைப் பிடிக்கும்
அதி நுட்ப லாவகத்துடன்
அந்த பிஞ்சு விரல்கள்
என் கன்னத்தை தொட்டபோது

என்னுள் தோன்றியது
இதற்காகவே இன்னும்
பல்லாண்டுகள் வாழலாமென்று....

மேலும்

பத்மநாபபுரம் அரவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2019 10:45 am

என் பால்ய காலத்தில்
வீட்டு மாமரத்தில்
இலைகளைப் பிணைத்துப் பின்னி
பெருங் கூட்டமாய் கூடுகளில்
முசுறெறும்புகள் வசித்தன...

மரமேறி மாம்பழங்கள்
பறித்துண்ண ஆசை விரிந்தாலும்
முசுறுகளை நினைத்தாலே
உடலெரியும்..

மாம்பழங்கள் சுற்றி கூடெழுப்பிக்
குழுமியிருக்கும்
அவைகளின் கூட்டைக் கலைத்தால்
உடலில் ஓரிடம் விடாது .. மொத்தமாய் விழும்

விழுந்த நொடியில் கடிக்கும்
கடித்த இடத்தில் தன் வால் நகர்த்தி
எரி நீர் வைக்கும்
எரியும் ஆனால் தழும்பாகாது, தடிக்காது..

உடலெங்கும் சாம்பலைப் பூசி
அகோரிகள் போல் மேலே செல்வோம்...
கூடுகள் உடைகையில்
வெண்ணரிசி போல் தரையுதிரும்
ஏராளம் முட்டைகள்…

அத்தனைய

மேலும்

பத்மநாபபுரம் அரவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2019 10:26 am

நினைவலை


நிழல் தவிர்த்த வெளிகளை
அடைத்து நிறைத்திருக்கிறது வெயில்..

பாரபட்சம் பாராமல் எவ்விடமும்
சுழன்றடிக்கிறது காற்று..

புழுதியுடன் பறக்கிறது
பறவைகள் உதிர்த்த மென்னிறகுகள்

உடைமர முட்கிளையிடை
கூடு கட்டுகின்றன காடை, கவுதாரிகள்

காளைகளின் கழுத்து மணியோசையுடன்
நகர்கிறது மாட்டு வண்டி

சாணியள்ளி கூடை நிரப்புகிறாள் ஒரு பெண்
ஒய்யாரமாய் வெளித்திண்ணையில்
ஒய்வெடுக்கிறது ஒரு நாய்

சிறு உறுமலுடன் நிறைய குட்டிகள்
பின் தொடர ஓடிச்செல்கிறது தாய்ப் பன்றி..

தடதடக்கும் மின்சார ரயிலின் ஓசையில்
திடுக்கிட்டு விழிக்கிறேன்
சுகக்கனவைத் தொலைத்து….

மேலும்

அழகான கவிதை 02-Mar-2019 11:16 am
பத்மநாபபுரம் அரவிந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2019 10:09 am

பயணத்தின் போது
நிலா தன்னுடனே
வருகிறதென்று
சிரித்து ரசிக்கும்
குழந்தையின் முகத்தில்
தெரிகிறது
பல நூறு நிலாக்கள்…

மேலும்

அருமை 02-Mar-2019 10:27 am
மேலும்...
கருத்துகள்

மேலே