மென்மை

ஒரு மயிலிறகின் வருடலைப் போல
பட்டாம் பூச்சியின் ஓசைகளற்ற
சிறகசைப்பினைப் போல

முயலொன்றின் முதுகினைத்
தடவுவதைப் போல
பூவொன்று காம்பிலிருந்து
தரையுதிரும் மவுனத்தைப் போல

ஒரு சிறு மீனைப் பிடிக்கும்
அதி நுட்ப லாவகத்துடன்
அந்த பிஞ்சு விரல்கள்
என் கன்னத்தை தொட்டபோது

என்னுள் தோன்றியது
இதற்காகவே இன்னும்
பல்லாண்டுகள் வாழலாமென்று....

எழுதியவர் : பத்மநாபபுரம் அரவிந்தன் (2-Mar-19, 10:49 am)
பார்வை : 103

மேலே