சித்திரைத் திருநாள் வாழ்த்து

உறக்கம் கலைத்து உழைப்பைப் பெருக்கு
உண்டாகு மதிலே மகிழ்ச்சிப் பெருக்கு
உறவின் கூட்டில் உற்சாக மிருக்கு
உணர முளைக்கும் சிறகு உனக்கு..!

முட்டவரு மந்த சோம்பலை விரட்டு
முன்னேறும் எண்ணத்தை நெஞ்சினில் திரட்டு
எட்டிடும் தூரம் வான மிருக்கு
எட்டுமா என்கிற கேள்வியு மெதற்கு..?

வெளிச்சம் கூட்டிட வந்தது சித்திரை
வெற்றிகள் நாட்டிட வந்தது சித்திரை
களிக்கும் வாழ்வை யளிக்கும் சித்திரை
காணுமே மேலும் மேன்மை இத்தரை..!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளுடன்
சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (15-Apr-25, 1:06 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 12

மேலே