நற்காதல் நல்கினாய் கண்ணால்

நற்காதல் நல்கினாய் கண்ணால்

சிறகடிக்கும் எண்ணங்கள் சிந்தனை வானில்
நிறங்களில் வானவில்போல் நீந்தும் நினைவு
புறநானூற் றுப்பாபோல் போர்க்கள நெஞ்சில்
நறுந்தேன்போல் நற்காதல் நல்கினாய் கண்ணால்
அறமாய்நம் வாழ்வில் அகம்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Apr-25, 10:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே