சிவா பாலா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சிவா பாலா |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 17-Mar-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Feb-2019 |
பார்த்தவர்கள் | : 193 |
புள்ளி | : 40 |
மஞ்சள் நிலவொளியில் மாணிக்கத் தேராக
என் நெஞ்சம் பறிக்கின்றாய் அஞ்சுகமே அழகாக....
சந்தனப் பாதங்கள் தரையில் நடக்கையிலே என் நெஞ்சம் உருகிடுமே
அந்த நேரத்தில் மெழுகாக.....
உன் மேனி அழகினிலே உள்ளம் தானா தத்தளிக்கும்
உனக்காக தன் உயிரை உவகையுடன் தந்தளிக்கும்.....!
என்னவள்
என்னிடம்
கெஞ்சிக் கேட்டும்
சொல்ல தயங்குகிறேன்
என் முதல் கவிதை
அவள் பெயர் என்பதை..
எமனின் பாசக் கயிரைதான் கொலுசாக கட்டியிருக்கிறாயா இப்படி உயிரை வாங்குகிறதே...!! அது என்ன மணிமேகலையின் அமுதசுரபியா இப்படி உயிரை வார்க்கிறதே..!!
கோபத்தில் நீ நடந்தால் இடியாய் இடிக்கும் கொலுசு கொஞ்சியே நடக்கும் போது குழலாய் இனிக்கும்....
அன்போடு நடக்கும் போது கோவில் மணியாய் அழைக்கும் ஆசை மோகத்தில் நடக்கும் போது காமராகம் இசைக்கும்..... தூக்கத்தில் இருந்தாலும் வாழ்க்கை குழப்ப ஏக்கத்தில் இருந்தாலும் கொட்டும் சத்தத் தாக்கத்தில் இருந்தாலும் எட்டிடுமே என்னிரு செவியிலும்
உன் இன்னிசை கொலுசொலி......!
நிலவும் பெண்ணும் ஒன்றே
அரை நிலவாய்
குளிர் முகமாய்
காண்போரை தடுமாற
வைக்கும் அழகிய நிலவே
எட்டி தொட முடியாத
தூரத்தில் நீ
பார்த்து பார்த்து
ரசித்து ரசித்து
ஒரு தலை காதல் வேறு
உன் மீது
நீ அறிவாயா வெண்ணிலவே
உன்னருகே வந்து
ஒரு செல்ல முத்தம்
தரட்டுமா?
அப்படியென்ன வெட்கம்
நேற்று நீ இப்படி
சிவந்து விட்டாய்
அப்பப்ப உன் நிறம்
கண்டு
மயங்கி
கிறங்கி
போனேன் அன்பே
நிலா நீ என்னை
ஏற்றுக் கொள்வயா?
தோழனாக
காதலனாக
நட்பாக
எப்படியோ உனை
ரசிக்கும் பாக்கியம்
அதுவே பாக்கியம்.....
நாளெல்லாம் உன் நினைவில்
நகருதடி பொன்மானே
நானெல்லாம் நீ மறந்தால்
கை தவறிய மண்பானை.....!
வீணென்று வாழ்க்கையினை
விரக்தியோடு நானிருந்தேன்
தேனொன நீ வந்தாய்
தெருவெல்லாம் சொர்க்கமாச்சு....!
ஒருமுறையேனும் உன் விழி பாராது
உறக்கம் வருவதில்லை
உயிரை உரசும் குரலினை கேளாமல்
பசியும் தெரிவதில்லை.....!
அழகுகள் கூடி மாநாடு நடத்தும்
அங்கம் உனதல்லவா
ஆசைகள் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும்
அவலம் எனக்கல்லவா......!
நிலவும் உனக்கு பணிவிடை செய்யும்
நீயே எந்தன் மனராணி-நான்
நினைப்பது மட்டும் நடக்கலை என்றால்
விழுவேன் நானும் பிணமாகி....!
பால் குடிக்க வந்ததோ...
தோல் கடிக்க வந்ததோ...
மேல் பாயும் நாய்களுக்கு
வால் முன்னே முளைத்தது..!
வாய் கிழிய கதறியும்...
தாய் மொழியில் அலறியும்...
பாய் நசுங்கும் அளவிற்கு
பாரம் என்னில் விழுந்தது..!
காது மூக்கு மட்டும்தான்
காற்றின் கைவசம்..!
மீதி துளை எல்லாமே
மிருகத்தின் சிகைவசம்..!
தோது நன்கு அமையத்தான்
தோழியென்று சொன்னானோ..!
தோற்றுப்போன நட்புக்குள்
தோற்றுவிடா நடிப்பு அது..!
தாலி ஏறும் உறுதியென
தாசியாய் மாற்றிவிட...
போலி வேசம் போட்டுத்தான்
போதைப் பேச்சு தாராளம்..!
பாலியல் கொடுமைகள்
பாலித்தீன் தாள்களோ..!
மங்கையின் வாழ்வினில்
மக்காமல் ஏராளம்..!
சிந்திக்க மறந்து
ச
யார் நீ?
என் வாழ்க்கையை
நீ என்னை சந்திக்கிறாய்
நீ வரும்போது
நான் பார்க்க மறந்துவிட்டேன்
தயவுசெய்து மீண்டும் வரட்டும்
நான் உனக்காக காத்திருக்கிறேன்
உலகில்
பூமியில்
வானத்தில
மேகத்தில்
கருத்தில்
என் இதயத்தில்
அவள்
என்னை
மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பும்
எனக்கு நீண்ட ஆயுள் வேண்டும்
அவள் வரும்போது
உள்ளத்தின் உள்ள ஆழமாக அன்பே
அவளுக்கு
என் காதலிக்கு உணர்த்திட மட்டுமே!!
எல்லாப் படிமங்களிலும் நீதான்
என் கனவுச் சாயல்களைக் கவர்ந்து
கடை விரிக்கிறாய்...
விலை கேட்டு பேரம் பேசி வியர்க்கிறேன்...
விடுவதாகவும் இல்லை விற்பதாகவும் இல்லை...
விடிய விடிய விழித்து சிவந்த கண்ணுக்கு
நந்தியாவட்டையாவது கொடு...
ஒற்றி எடுப்பது உன்பாடு...
பொருள் சேர்ப்பதே உன் பொழுது...
பொருளும்,பொழுதும்
நான்தான் என்பது என்றுதான் விளங்குமோ...
இன்னுமா கடையில்...!!!
காலை வணக்கம் ......
உணர்வுகள்
உணர்வுகளின் பந்தியிலே,
முந்தி வந்த கோபத்தின் உச்சினிலே,
உணர்வுதனின் வன்சொல்லில்,
நஞ்சுண்டான் பகையான் !!!
துரோகத்தின் துணையோடு,
உணர்வுகளில் அம்பு எய்ய,
துயரத்தின் தூதுதனில்,
வெள்ளக்குருதி விழியோரம்
வழிந்தோடியதே!!!
நீ இல்லா கணங்களில்,
உன் நினைவோடு நான் பேச,
நினைவுதனின் உணர்வாய்,
இதழ்களின் பிரிவுதனில்,
புன்னகை பூப்பெய்தியதே !!!
மழைச்சாரலின் முத்தத்தில்,
உன் கடைக்கண் பார்வைதனில்,
உணர்வுதனின் உணர்ச்சியிலே,
துளிர்விட்ட நம் உணர்வுப்பூர்வக் காதல்!!!
உணர்வுடன்
தௌபிஃக்
யாரையும் கை விடாமாட்டேன்
செய்வினை கொண்டு தாண்டிபேன்
நன்செயல் கண்டு காப்பாற்றவும் செய்வேன்!!!!!
நான் இல்லை என்றால்
மனிதனின் செயல்
இல்லை என்பேன்!!!!
தவறோ சரியோ மனிதனின்
மறுஉருவாக செயல்படுவேன்
வெல்லுவது நீயா விழுவது நானோ
மானிட!!!!!!!!!
உன் மதிக் கொண்டு என்னை
வெல்லுவை என்றால் என் பெயர் வீதியின் வாழ்க்கை ஆகும் மானிட!!!!!!!!
கரிசல் காட்டு
மண்ணாய்
கானக் குயில்களின்
கீதமாய்
மருண்டோடும் மானின்
மிரட்சியாய்
மலையருவி
வீழ்ச்சியாய்
செங்காந்தள்
மலர்களின்
கூட்டமாய்
கைதேர்ந்த
தொழிலாளியாய்
காகிதத்
தாள்களின்
உரசலாய்
கண்ணில்
இருக்கும்
கருவிழியாய்
தேனை முகர்ந்திடும்
தேனீக்களின்
கூட்டமாய்
பாய்ந்தோடும்
நதிகளின்
ஆரவாரமாய்
துள்ளிக்குதித்து
விளையாடும்
மீன்களாய்
பனியை
தணிக்கும்
போர்வையாய்
பூவில்
இருக்கும்
மகரந்தமாய்
வானில்
உலாவரும்
வெள்ளை
நிலவாய்
என்னவென்று
சொல்வேன்
எப்படிச்
சொல்வேன்
பார்க்கும்
இடமெல்லாம்
பரிணமிக்கிறாய
துயரங்களை சகிக்கும்படி
இதயத்தை தேற்றுகிறேன்,..
என் இதயச் சுமைகளை
இறக்கிட நான்
இன்னுமோர் உறவைத்
தேடவில்லை,,,
ஏன் தெரியுமா,,.
என் முதலும் முடிவும்
நீயல்லவா,....பெண்ணே!!!!!!