உன் நினைவில்
நாளெல்லாம் உன் நினைவில் 
நகருதடி பொன்மானே 
நானெல்லாம் நீ மறந்தால் 
கை தவறிய மண்பானை.....! 
வீணென்று வாழ்க்கையினை 
விரக்தியோடு நானிருந்தேன் 
தேனொன நீ வந்தாய் 
தெருவெல்லாம் சொர்க்கமாச்சு....!
ஒருமுறையேனும் உன் விழி பாராது 
உறக்கம் வருவதில்லை
உயிரை உரசும் குரலினை கேளாமல் 
பசியும் தெரிவதில்லை.....!
அழகுகள் கூடி மாநாடு நடத்தும்
அங்கம் உனதல்லவா 
ஆசைகள் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் 
அவலம் எனக்கல்லவா......! 
நிலவும் உனக்கு பணிவிடை செய்யும் 
நீயே எந்தன் மனராணி-நான் 
நினைப்பது மட்டும் நடக்கலை என்றால் 
விழுவேன் நானும் பிணமாகி....!
 
                    

 
                                