பெண்ணே யாவும் உன் பிம்பமே

தெவிட்டாத தேனும், மலராத மொட்டும், கூவும் குயில்...
யாவும் உன்னிடம் தோற்குமே... என் அச்சு வெல்லமே...

தூங்கும் பஞ்சணையில்
போர்த்தும் போர்வையில் உன் பிம்பம்
காணும் கனவில்
பார்க்கும் கண்ணாடியில் உன் பிம்பம்
குளியல் நீரிலும் உன் பிம்பம்

தொழும் தெய்வம்
காணும் காட்சி உன் பிம்பம்
இழுக்கும் தேர்
வண்ணக் கோலம் உன் பிம்பம்
தோட்டத்து ரோஜாவும் உன் பிம்பம்

பெண்ணே யாவும் உன் பிம்பமே
கேட்டே தெரிவாய் என் பந்தமே...

சுடும் தீயில்
கொட்டும் பனியில் உன் பிம்பம்
ஓடும் நதியில்
தாவும் மான் உன் பிம்பம்
உலவும் நிலவிலும் உன் பிம்பம்

ஆடும் ஊஞ்சல்
படரும் கொடி உன் பிம்பம்
நிற்க்கும் மரம்
கொஞ்சும் கிளி உன் பிம்பம்
கொட்டும் அருவியும் உன் பிம்பம்

பெண்ணே யாவும் உன் பிம்பமே
கேட்டே தெரிவாய் என் பந்தமே...

வலம்புரி சங்கு
தாவி ஓடும் முயல் உன் பிம்பம்
பெளவ் பெளவ் ஒலியும்
விளிக்கும் பேச்சு உன் பிம்பம்
தாளம் போடும் பாத கொலுசும் உன் பிம்பம்

திசைகள் நான்கில்
ஓடும் ஆற்றில் உன் பிம்பம்
பரந்த வானில்
தூரும் சாரலில் உன் பிம்பம்
அலை நுரையிலும் உன் பிம்பம்

பெண்ணே யாவும் உன் பிம்பமே
கேட்டே தெரிவாய் என் பந்தமே...

மீட்டும் வீணை
அசையும் கீற்று உன் பிம்பம்
தொடரும் நிழல்
பரவும் ஒளியும் உன் பிம்பம்
வண்ண மயில் தோகையும் உன் பிம்பம்

சேற்றில் முளைத்த செந்தாமரை
சிரிக்கும் குவளை உன் பிம்பம்
மயக்கும் தாழம்பூ உன் பிம்பம்
வானவில் வர்ணஜாலமும் உன் பிம்பம்

பெண்ணே யாவும் உன் பிம்பமே
கேட்டே தெரிவாய் என் பந்தமே...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (26-Mar-19, 12:25 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 490

மேலே