மதனகோபால் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மதனகோபால் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 713 |
புள்ளி | : 58 |
Software Consultant , TATA Consultancy Services (TCS) மற்றும் கவிதை எழுதுபவர்
அழகின் பொருள் யாதென அகராதியில் தேடி பார்த்தேன்...
அதில் உன் முகம் கண்டு சற்று வியந்து போனேன்....
விளக்கொளியில் தேடினேன்
விழிகள் இரண்டும் நோகுதடி...
இருட்டொளியில் வந்து நின்று
மின்னலாய் முன்னே தோன்றினாயே...
உளி பட்டு உடையாத பனிக்கட்டிகள்...
உன் மொழி கேட்ட நொடியில்
சேதாரம் ஆகி போனதே...
உன் பெயர் சொல்லி தான்
என் நெஞ்சில் சுப்ரபாதம்
உன்னை தழுவி உறங்கும் நேரம்
மோட்சம் உத்திரவாதம்...
எத்தனை நிலவுகள் ஒரு நாளிலே
பகலிலும் இரவிலும்
உன்னை பார்க்கும் வரை...
எத்தனை நிறங்கள் மலர்களிலே
தூரிகை நீட்டி உன்னை வரையும் வரை...
மொழிகள் ஒன்று கூடுதே
வாய் சுழற்சி பேசும் மாயமோ...
தெய்வங்கள் வந்து வணங்குதே...
தேவி உந்தன் தரிசனமோ...
நதிகள் வளைந்து இணையுதே
பூமகள் நாளும் நீ நீந்திடவோ...
மலைகள் மலைத்து சரிந்திடுதே
ரதியே உனது நாட்டியமோ...
புல்லாங்குழல் அது சாயுதே
உனது குரலின் தாக்கமோ...
உனது அழகை எழுதிடவே
வானம் சுவராய் மாறிடுமோ...
நீர் இன்றி வானம்
நிலம் காய்ந்து போகும்...
நம் காதல் உயிர் தாங்குமே...
காலங்கள் தந்த
காயங்கள் யாவும்...
கடலோடு கரை சேருமே...
தேனான பாடல் இங்கு
இசையின்றி ஊர் போகுமோ...
கண்ணம்மா...கண்ணம்மா...
தாளாத பாரங்கள்
தரை மீது சாயும்...
பாடாத ராகங்கள்
தடம் இன்றி போகும்...
சோகங்கள் விரட்டி
சோறு உண்டு வாழ...
உன் பாசம் வழி காட்டுமே...
கண்ணம்மா...கண்ணம்மா...
வெண் நிலாவை வெந்நீரில்
கரைத்து கரைத்து குளித்து
வெட்கங்கள் மறைத்து வந்த
என் மதியே...என் உயிரே...
கண்கள் நாலும் காணும்
ஒற்றை பிம்பம்...
சொல்லா மொழிகள்
மனதில் மலர்ந்து
காலம் தாண்டி வாழுமோ...
வெண் பனி சாரல்
கொஞ்சம் நெஞ்சில் வீசுமோ
உன்னுடன் நானும்
இணைந்து நடக்கையில்
பூலோகம் என் கையில் அடங்குமோ...
என் மதியே...என் உயிரே...
வெண் நிலாவை வெந்நீரில்
கரைத்து கரைத்து குளித்து
வெட்கங்கள் மறைத்து வந்த
என் மதியே...என் உயிரே...
கண்கள் நாலும் காணும்
ஒற்றை பிம்பம்...
சொல்லா மொழிகள்
மனதில் மலர்ந்து
காலம் தாண்டி வாழுமோ...
வெண் பனி சாரல்
கொஞ்சம் நெஞ்சில் வீசுமோ
உன்னுடன் நானும்
இணைந்து நடக்கையில்
பூலோகம் என் கையில் அடங்குமோ...
என் மதியே...என் உயிரே...
தேனில் சுவைப் பிரித்தல்
அழகா?
அலையில் நுரைப் பிரித்தல்
அழகா?
இசையில் சுரம் பிரித்தல்
அழகா?
பூவில் மணம் பிரித்தல்
அழகா?
பிரித்தலும் பிரிதலும்
அழகே என்றால்...
உன்னில் என்னை
பிரித்து விடு...
என்றும் அன்புடன்,
மதன்
பிரித்து எழுதுக:
இடப்புறம் =
மாந்தோப்பு மாங்குயிலும்
மன்றாடி கேட்குதடி
மங்கை உன் இசைக்குரலோ?
கூடுடோடு கூடி வந்து
தேனீக்கள் மொய்க்குதடி
மங்கை உன் தேனிதழோ?
வெளிச்சம் என தான் மயங்கி
முத்து மணி முறைக்குதடி
மங்கை உன் சிரிப்பழகோ?
வண்ணமெல்லாம் உடல் ஏந்தி
தோகை மயில் தோற்குதடி
மங்கை உன் தோளழகோ?
மாங்கனிகள் மண் விழுந்து
மன்றம் வந்து மாய்குதடி
மங்கை உன் மார்பழகோ?
என்றும் அன்புடன்,
மதன்