அவளின் அழகு காதல்

வெண் நிலாவை வெந்நீரில்
கரைத்து கரைத்து குளித்து
வெட்கங்கள் மறைத்து வந்த
என் மதியே...என் உயிரே...

கண்கள் நாலும் காணும்
ஒற்றை பிம்பம்...
சொல்லா மொழிகள்
மனதில் மலர்ந்து
காலம் தாண்டி வாழுமோ...

வெண் பனி சாரல்
கொஞ்சம் நெஞ்சில் வீசுமோ
உன்னுடன் நானும்
இணைந்து நடக்கையில்
பூலோகம் என் கையில் அடங்குமோ...
என் மதியே...என் உயிரே...

எழுதியவர் : மதனகோபால் (2-Jun-19, 10:38 am)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 593

மேலே