தெரு

தொட்டுச் சென்றது காற்று
தழுவிச் சென்றது தென்றல்

பாராமல் சென்றது
அவளின் பார்வை
பதியாமல் சென்றது
அவளின் நினைவுகள்

காதல் என காற்றைத் தழுவிட
கைக்குள் அகப்படாமல்
தென்றலை தீண்டிட எந்த
ஆயுதம் தரிப்பது..?

அந்த தெருவிற்கு தெரிகின்றது
எனது காலடியோசைகள்
அவளுடைய ஜன்னல்களுக்கும்
கண்கள் உண்டோ...?

என் காலடியோசைகளில்
தானாக மூடிக்கொள்ளும்
அந்த ஜன்னல்

என் இதய துடிப்பை
எவ்வாறு தெரிந்து கொண்டது
அந்த தெரு...
யாரும் மற்ற பாலையாக
துடைத்தபடி...

என்றாவது ஓர் நாள்
அந்த தெருவும் கூறிடும்
நீ என் நாயகன் என்று
அவளுக்குத் தெரியுமா...
அவள் தான் என் நாயகியென்று..?

என்தினசரி நடவடிக்கைகளை
என் பாக்கெட்டிலிருந்து
உளவு பார்க்கும்
அந்த கைபேசி
மறைமுகமாக என்னை
விலைபேசியதனை -அந்த
தெருவின் நன்றியில் தான்
தெரிந்து கொண்டேன்...

இப்போது அந்த தெரு
எல்லா வரைபடங்களிலும் உள்ளதாம்
நான் அவளின்
வாசல் தாண்டிச் சென்றதனை
அவள் வீட்டுச் ஜன்னல்கள்
இன்னும் முறைத்தபடி...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (2-Jun-19, 10:42 am)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : theru
பார்வை : 312

மேலே