கறிக்கா வெறிக்கா
டேய் கொள்ளுப் பேரா கோத்துரேசு,
#@@@@@
என்னைங்க பாட்டி?
@@@@@@@
உம் சித்தப்பா பையன் உனக்கு ஆறு
மாசத்துக்கு முன்னாடி திருமணம்
ஆனவன். அவனுக்கு பெண் குழந்தை
பிறந்து ஆறு மாசம் ஆகுது. அந்தக்
குழந்தையோட பேரு என்னடா
கோத்துரேசு?
@@@@@@@
ஹரிகா.
@@@@@@@
(பெரும்பாலான தமிழர்கள் 'ர', 'ற' இரண்டு
எழுத்துக்களையும் ஒரே மாதிரி உச்சரிக்கிறார்கள் என்பதை நினைவில்
கொள்ளவும்):
கறிக்கா'வா? சரி நேத்து உன் மனைவிக்குப்
பிறந்த பெண் குழந்தைக்கு என்ன பேருடா
வைக்கப் போறீங்க?
@@@@@@
பாட்டி, உங்களைக் கேட்காம நான்
எதையாவது செய்திருக்கிறேனா? உங்கள்
பேரு பொன்னம்மா. அந்தப் பேரையே எங்க
பொண்ணுக்கு வைக்கவா?
@########@
வேண்டாம்டா கோத்துரேசு. எங்க
காலத்தில பெண் குழந்தைகளுக்கு
"பொன்னம்மா, இல்லம்மா, தங்கம்மா,
பொன்னியம்மா"னு தமிழ்ப்
பேருங்களைத்தான் வைப்பாங்க. ஆனால்
இப்ப பெத்த குழந்தைகளுக்கு இந்திப்
பேரை வைக்காத தமிழர்களே உலகத்தில்
இல்லை. தமிழ்ப் பேருங்களை
வைக்கிறதைக் கேவலமா
நினைக்கிறாங்க. காலம் மாறிப் போச்சுடா.
அதனால் என்ற எள்ளுப் பேத்திக்குத்
தமிழ்ப் பேரை வச்சுக்
கேவலப்படுத்திடாதடா கோத்துரேசு.
@@@@@@@@@
சரி நீங்களே ஒரு பேரைச் சொல்லுங்க.
@@@@@@##
உன்ற பங்காளி 'கறிக்கா'னு அவள்
பொண்ணுக்குப் பேரு வச்சிருக்கிறான்.
நீ உம் பொண்ணுக்கு 'வெறிக்கா'னு பேரு
வைடா. இந்திப் பேரு மாதிரியே இருக்கும்
பேருடா 'வெறிக்கா'.
@@@@@@@@
சரி பாட்டி நீங்க விரும்ப மாதிரியே எங்க
பொண்ணுக்கு 'வெறிக்கா'ன்னே பேரு
வச்சிடறோம்.
@@@@@
சரிடா கோத்துரேசு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Harika = The Lord