இரவு

இரவு

இது எனது கவிதை அல்ல, தேன்மொழி அவர்களின் “நெற்குஞ்சம்” உரை நடை கவிதையாக சரளமாய் வரும் சிறு கதைகளின் ஒன்றில் இருந்த வருணணை.
பதிப்பு, முதல்பதிப்பின் ஆண்டு 2009, இரண்டாவது 2010

பொழுதுகள் கூடடையும்
அடர்ந்த இருப்பிடம்

காலம் தன் தேகம்
விரித்து கந்தர்வ
நடனம் நிகழ்த்தும்
தருணம்

தயக்கம் குடித்து,
வெட்கம் தொலைத்த
உயிர்களின் சுதந்திர
உலா காலம்

உயிர்கள் அந்தகார
வெளியில்
அடிநாதமாய் அடைந்து
கிடக்கும் ஒலியை
எழுப்பி கெக்கலிக்கும்
நேரம்

அமாவாசை நாளின்
நிலவை தோற்கடிக்கும்
பிரபஞ்ச ஆளுமை

இரவோடு போட்டியிடும்
மின்மினியின் வெளிச்சம் கூட
மாபெரும் குற்றம்

உயிர்களின் தாலாட்டு
இரவு

தன்னை திறந்து
ஒளியை ஏற்று கொள்கிறது
ஒளியோடு கலக்கும் மிக சிறந்த
கலவியின் உச்ச நாயகி இரவு

ஒளி தன்னை மூடி இருளை
அளிக்கிறது
உணர்வுகளுக்கு விருந்து
வைக்கிறது
உணர்வை விழுங்கி துயிலாதொரு
சயனத்தில் இருக்கிறது


உயிரினங்கள்
மெளனத்தை
கடை பிடிக்கும்
உலகம்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-Nov-24, 3:37 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : iravu
பார்வை : 46

மேலே