சாய்க்கும் காதல்
இளகியதோ...உருகியதோ
மனம் மெழுகுவர்த்தி
ஆகி போனதோ...
அந்தி மாலை தொலைத்த மஞ்சள்...
நின் முகத்தில் பூசி வர
பண்ணும் சிறு கொஞ்சல்...
காற்றாக காற்றாடி என்னை சாய்க்கிறாய்...
காற்றின் ஒலியாக புகுந்து
உயிரிலே புதைந்து போகிறாய்...
உன் நினைவாலே
வந்த கனவாலே...
இரவோடு இமைகள் இரண்டும்
பேசி கொள்ளுதே...
பெரிய உடலில் சின்ன இதயம்
உன் முகம் தாங்கி
நாளும் வாழுதே...
அன்பே...பேரன்பே...
உன் பெயரை சொல்லி
நாளும் வேகிறேன்...