மோட்சம் உத்திரவாதம்

அழகின் பொருள் யாதென அகராதியில் தேடி பார்த்தேன்...
அதில் உன் முகம் கண்டு சற்று வியந்து போனேன்....

விளக்கொளியில் தேடினேன்
விழிகள் இரண்டும் நோகுதடி...
இருட்டொளியில் வந்து நின்று
மின்னலாய் முன்னே தோன்றினாயே...

உளி பட்டு உடையாத பனிக்கட்டிகள்...
உன் மொழி கேட்ட நொடியில்
சேதாரம் ஆகி போனதே...

உன் பெயர் சொல்லி தான்
என் நெஞ்சில் சுப்ரபாதம்
உன்னை தழுவி உறங்கும் நேரம்
மோட்சம் உத்திரவாதம்...

எழுதியவர் : மதனகோபால் (7-Jun-19, 9:42 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 103

மேலே