அவள் தான் எத்தனை அழகு

எத்தனை நிலவுகள் ஒரு நாளிலே
பகலிலும் இரவிலும்
உன்னை பார்க்கும் வரை...
எத்தனை நிறங்கள் மலர்களிலே
தூரிகை நீட்டி உன்னை வரையும் வரை...

மொழிகள் ஒன்று கூடுதே
வாய் சுழற்சி பேசும் மாயமோ...
தெய்வங்கள் வந்து வணங்குதே...
தேவி உந்தன் தரிசனமோ...
நதிகள் வளைந்து இணையுதே
பூமகள் நாளும் நீ நீந்திடவோ...

மலைகள் மலைத்து சரிந்திடுதே
ரதியே உனது நாட்டியமோ...
புல்லாங்குழல் அது சாயுதே
உனது குரலின் தாக்கமோ...
உனது அழகை எழுதிடவே
வானம் சுவராய் மாறிடுமோ...

எழுதியவர் : மதனகோபால் (7-Jun-19, 9:39 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 3415

சிறந்த கவிதைகள்

மேலே