உணர்வுகள்
உணர்வுகள்
உணர்வுகளின் பந்தியிலே,
முந்தி வந்த கோபத்தின் உச்சினிலே,
உணர்வுதனின் வன்சொல்லில்,
நஞ்சுண்டான் பகையான் !!!
துரோகத்தின் துணையோடு,
உணர்வுகளில் அம்பு எய்ய,
துயரத்தின் தூதுதனில்,
வெள்ளக்குருதி விழியோரம்
வழிந்தோடியதே!!!
நீ இல்லா கணங்களில்,
உன் நினைவோடு நான் பேச,
நினைவுதனின் உணர்வாய்,
இதழ்களின் பிரிவுதனில்,
புன்னகை பூப்பெய்தியதே !!!
மழைச்சாரலின் முத்தத்தில்,
உன் கடைக்கண் பார்வைதனில்,
உணர்வுதனின் உணர்ச்சியிலே,
துளிர்விட்ட நம் உணர்வுப்பூர்வக் காதல்!!!
உணர்வுடன்
தௌபிஃக்