பெண் கொடுமை
பால் குடிக்க வந்ததோ...
தோல் கடிக்க வந்ததோ...
மேல் பாயும் நாய்களுக்கு
வால் முன்னே முளைத்தது..!
வாய் கிழிய கதறியும்...
தாய் மொழியில் அலறியும்...
பாய் நசுங்கும் அளவிற்கு
பாரம் என்னில் விழுந்தது..!
காது மூக்கு மட்டும்தான்
காற்றின் கைவசம்..!
மீதி துளை எல்லாமே
மிருகத்தின் சிகைவசம்..!
தோது நன்கு அமையத்தான்
தோழியென்று சொன்னானோ..!
தோற்றுப்போன நட்புக்குள்
தோற்றுவிடா நடிப்பு அது..!
தாலி ஏறும் உறுதியென
தாசியாய் மாற்றிவிட...
போலி வேசம் போட்டுத்தான்
போதைப் பேச்சு தாராளம்..!
பாலியல் கொடுமைகள்
பாலித்தீன் தாள்களோ..!
மங்கையின் வாழ்வினில்
மக்காமல் ஏராளம்..!
சிந்திக்க மறந்து
சிவப்புக்கு மயங்கி...
பந்திக்கு போகமாலே
எச்சிலிலை ஆகிவிட்டேன்..!
முந்தியை விரிக்க
முரடனின் மிரட்டலில்...
குந்தியின் மருமகளாய்
குருநொடி மாறிவிட்டேன்..!
கண்ணன் காப்பற்றுவதே
கதையென்று நினைத்தேன்..!
அண்ணனென அழைத்தாலும்
அப்படித்தானே இருக்கிறது.!
அண்ணனென அழைத்தாலும்
அப்படித்தானே இருக்கிறது..!!!
நன்றி