மீண்டும் கற்காலம் போவோம்

கற்காலத்தை மறந்து தற்காலத்தில்
மூழ்கி கிடக்கும் மானிடா...!
நம் முன்னோர்கள் அனுபவித்த
கலைகள் எங்கே சென்றன....
ஆற்று நீரை அள்ளி குடிக்கும் காலம் போய் விட்டது....
சேற்று நீராய் மாறிய மாயம் தான் என்ன...
சோலைகளிலும் வயல்களிலும்
சுவாசிக்கும் காற்றை விடுத்து..
குளிரூட்டும் செயற்கை காற்றோடு உலாவிக் கொண்டிருக்கும் மானிடா...!!
நம் மூச்சுக் காற்றின் ஆயுளைக் குறைத்து...விடாதே..!!குழந்தைகள்விளையாடியகில்லி பள்ளாங்குழி ஆடு புலி எல்லாம் சென்றன அலைபேசியில் மூழ்கடித்து

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (13-Mar-19, 11:20 pm)
பார்வை : 117

மேலே