நிலவும் பெண்ணும் ஒன்றே
நிலவும் பெண்ணும் ஒன்றே
அரை நிலவாய்
குளிர் முகமாய்
காண்போரை தடுமாற
வைக்கும் அழகிய நிலவே
எட்டி தொட முடியாத
தூரத்தில் நீ
பார்த்து பார்த்து
ரசித்து ரசித்து
ஒரு தலை காதல் வேறு
உன் மீது
நீ அறிவாயா வெண்ணிலவே
உன்னருகே வந்து
ஒரு செல்ல முத்தம்
தரட்டுமா?
அப்படியென்ன வெட்கம்
நேற்று நீ இப்படி
சிவந்து விட்டாய்
அப்பப்ப உன் நிறம்
கண்டு
மயங்கி
கிறங்கி
போனேன் அன்பே
நிலா நீ என்னை
ஏற்றுக் கொள்வயா?
தோழனாக
காதலனாக
நட்பாக
எப்படியோ உனை
ரசிக்கும் பாக்கியம்
அதுவே பாக்கியம்.....