புவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  புவி
இடம்:  srimushnam
பிறந்த தேதி :  15-Sep-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Oct-2017
பார்த்தவர்கள்:  2770
புள்ளி:  26

என் படைப்புகள்
புவி செய்திகள்
புவி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2021 7:46 am

பிரிவுகள் என்பது நிறந்தரமில்லை
       நாம் விலகும் வரை.....
நினைவுகள் மட்டுமே சொந்தமில்லை
       நாம் இணைந்திருக்கும் வரை.....
கனவுகள் என்றும் கலைவதில்லை
      நாம் அடையும் வரை ......
வெற்றிகள் என்றும் கடினமில்லை
      நாம் முயற்சிக்கும் வரை.......
தோல்வி என்பது கடைசியில்லை
      நாம் வெல்லும் வரை.....
பணம் என்றும் பெரியதில்லை
     நாம் அடிமையாகாத வரை......
உறவுகளில் என்றும் பிரச்சனையில்லை
     நாம் மதிக்கும் வரை......
மனிதம் என்றும் சாவதில்லை
     நாம் மறக்கும் வரை .....   
மகிழ்ச்சி என்றும் மறைவதில்லை
     நாம் தொலைக்கும் வரை.....
அனைத்தும் நம்மிடமே நிலைத்திருக்கும்
   

மேலும்

புவி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2021 11:06 am

மேகம் விடுத்து
காற்றை துளைத்து
மண்ணை முத்தமிடும்
மழை துளியே......

உன் ஒரு துளிக்காக
தவம் கிடக்கிறான்
மண்ணின் மைந்தன்
அவன் உயிர் நீர்
வற்றுவது தெரியாமலே - அவனுக்கு
பதில் உண்டா உன்னிடம்....

மேலும்

புவி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2021 5:28 pm

தொடும் வானம்
  தொடுகின்ற தூரம் தான்
ஆம்
தொடும் வானம்
  தொடுகின்ற தூரம் தான்
தன் நம்பிக்கையும்
  தன் உழைப்பில் நம்பிக்கையும்
வெற்றியின் உச்சத்தை
   எட்டி விட போதுமே
உச்சத்தை தொட
    அச்சம் தடைகல்லானால்
துச்சமென எண்ணி
     அதை மைல்கல்லாக்கு
சமுத்திரமும் உன் கையில்
   உலகே உன் விரல்நுனியில்
நிலாவிலும் உலாவரலாம்
     விண்மீனுக்கும் தூண்டில் போடலாம்
முயற்சிகள் தான் தேவை
     முயற்சித்து பார்....

மேலும்

புவி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2021 10:52 pm

நீ தொட்ட இடமெல்லாம்
சிகப்பை பூசிக்கொள்ள,
நீ தொட்டதினால் என்னுள்
சிலிர்ப்பு தோன்றியடங்க,
நீ கொண்ட வாசம் என்னை
கிறங்க செய்திட,
மயக்கத்தில் என்னை
தள்ளிவிட்டாய்...
என்னவன் இதை அறிந்தால்
உன் நிலை என்னவோ,
மருதவாசினியே....

மேலும்

புவி - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
புவி - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
புவி - வருண் மகிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2018 3:51 pm

அழகிய கண்கள் அலைமோதுகையில்
கொஞ்சிப் பார்க்குது காதல் சாவி ...!

அழகுப் பதுமையின் அங்கம் பார்க்கையில்
கொஞ்சம் எட்டிப் பார்க்குது காமச் சாவி ...!

இளமையை ரசிக்க இன்பச் சாவி!
முதுமையில் இனிக்கும் அனுபவச் சாவி !

கல்லச் சாவி கொண்டு திறந்தால்
கல்லறை சென்றும் கலவரமே ..!

நல்ல சாவி கொண்டு திறந்தால்
நடப்பவை எல்லாம் நல்வரவே ...!

எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
ஜனனத்தில் நுழைய ...
மரணத்தில் தொலைய...

எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
சாவியை தொலைத்தோர் சிலர் ..
பூட்டை தேடிக்கொண்டே பலர் ...?

எல்லா உணர்ச்சிக்கும் ஒரு பூட்டு
எல்லாப் பூட்டுக்கும் சாவி உண்டு ...!
தேடிக் கண்டு நீ கொண்டால்

மேலும்

நன்றி பிரியா 20-Sep-2018 6:50 pm
எல்லா உணர்ச்சிக்கும் ஒரு பூட்டு எல்லாப் பூட்டுக்கும் சாவி உண்டு ...! தேடிக் கண்டு நீ கொண்டால் வாழ்க்கை தேடல் முடிந்திடுமே?!! சரியான பாதையில் சென்றால் நினைத்தது எல்லாம் நடக்கும் ....என்பது..இந்த சாவி என்பதில் கூறியுள்ளீர்கள் 20-Sep-2018 3:06 pm
thank u bhuvi... 08-Sep-2018 8:40 pm
எல்லோரிடத்தும் ஒரு சாவி ... ஜனனத்தில் நுழைய ... மரணத்தில் தொலைய... மனிதனின் வாழ்க்கை இரண்டு வரிகளில் அருமை அண்ணா 08-Sep-2018 6:07 pm
புவி - ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2018 11:01 am

உணர்வுகள்

உணர்வுகளின் பந்தியிலே,
முந்தி வந்த கோபத்தின் உச்சினிலே,
உணர்வுதனின் வன்சொல்லில்,
நஞ்சுண்டான் பகையான் !!!

துரோகத்தின் துணையோடு,
உணர்வுகளில் அம்பு எய்ய,
துயரத்தின் தூதுதனில்,
வெள்ளக்குருதி விழியோரம்
வழிந்தோடியதே!!!

நீ இல்லா கணங்களில்,
உன் நினைவோடு நான் பேச,
நினைவுதனின் உணர்வாய்,
இதழ்களின் பிரிவுதனில்,
புன்னகை பூப்பெய்தியதே !!!

மழைச்சாரலின் முத்தத்தில்,
உன் கடைக்கண் பார்வைதனில்,
உணர்வுதனின் உணர்ச்சியிலே,
துளிர்விட்ட நம் உணர்வுப்பூர்வக் காதல்!!!

உணர்வுடன்
தௌபிஃக்

மேலும்

நன்றி நட்பே 25-Feb-2019 8:57 pm
அருமையான வரிகள்!!!!!! 25-Feb-2019 8:22 pm
நன்றி நட்பே 22-Sep-2018 6:32 pm
உணர்வுகளின் வரிகள், அருமை 03-Sep-2018 9:35 pm
புவி - புவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Aug-2018 11:06 pm

நீயும் நானும் மட்டும்
மழையில் நனைய வேண்டும்
மழைத்துளியே பொறாமை கொள்ள .,

நீயும் நானும் மட்டும்
நெடுந்தூரம் நடந்துசெல்ல வேண்டும்
நெடுஞசாலையே பொறாமை கொள்ள .,

நீயும் நானும் மட்டும்
கதைகளாய் பேச வேண்டும்
கதைகளே பொறாமை கொள்ள .,

நீயும் நானும் மட்டும்
உலகமே சுற்ற வேண்டும்
பறவைகளே பொறாமை கொள்ள

நீயும் நானும் மட்டும்
விளையாடி மகிழ வேண்டும்
குழந்தைகளே பொறாமை கொள்ள

ஆனால்
உன் மீது நான் மட்டும்
அன்பு கொள்ள வேண்டும்
நீயே பொறாமை கொள்ள
என் அன்பு கணவா..,,

மேலும்

நன்றி 01-Sep-2018 6:14 pm
நன்றி 01-Sep-2018 6:13 pm
உன் மீது நான் மட்டும் அன்பு கொள்ள வேண்டும் நீயே பொறாமை கொள்ள என் அன்பு கணவா..,,. .செம 01-Sep-2018 12:24 pm
ம்ம்... அருமை நட்பே.... 01-Sep-2018 10:00 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

சரவணன் சா உ

சரவணன் சா உ

பட்டாக்குறிச்சி
தென்னரசி

தென்னரசி

ஜெயங்க்கொண்டம்
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

வாசு

வாசு

தமிழ்நாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே