சாவி

அழகிய கண்கள் அலைமோதுகையில்
கொஞ்சிப் பார்க்குது காதல் சாவி ...!
அழகுப் பதுமையின் அங்கம் பார்க்கையில்
கொஞ்சம் எட்டிப் பார்க்குது காமச் சாவி ...!
இளமையை ரசிக்க இன்பச் சாவி!
முதுமையில் இனிக்கும் அனுபவச் சாவி !
கல்லச் சாவி கொண்டு திறந்தால்
கல்லறை சென்றும் கலவரமே ..!
நல்ல சாவி கொண்டு திறந்தால்
நடப்பவை எல்லாம் நல்வரவே ...!
எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
ஜனனத்தில் நுழைய ...
மரணத்தில் தொலைய...
எல்லோரிடத்தும் ஒரு சாவி ...
சாவியை தொலைத்தோர் சிலர் ..
பூட்டை தேடிக்கொண்டே பலர் ...?
எல்லா உணர்ச்சிக்கும் ஒரு பூட்டு
எல்லாப் பூட்டுக்கும் சாவி உண்டு ...!
தேடிக் கண்டு நீ கொண்டால்
வாழ்க்கை தேடல் முடிந்திடுமே?!!