விவசாயி கண்ணீர்

வேளாண் கதிரைக் காக்க
கதிர் வேலானே வருவதில்லை

கதிர் பச்சை எடுக்கவே
விவசாயி நீருக்கு பிச்சை எடுக்கிறான்

விதை வைத்துவிட்டு
விதவையாய் விவசாயி

வயல் எல்லாம் நெல்லா இருந்தால்தானே நாம் நல்லா இருக்கமுடியும்

ராணுவ வீரனும் விவசாயியும்
ஒன்றுதான் இருவருமே மண்ணுக்காக தன் இன்னுயிர் நீப்பவர்கள்

கன்னடத்திலிருந்து வரும் தண்ணீரை விட இவன் கண் தடத்திலிருந்து வரும் கண்ணீர் அதிகம்

உச்ச நீதி மன்றத்தின் ஆணை நிரம்பிய போது வராத தண்ணீர்
உச்ச கட்ட அணை நிரம்பும் போது
வருகின்றது

விதைத்து விட்டு வரவேண்டிய
தண்ணீர் இவனை வதைத்துவிட்டு வருகின்றது

இவன் உழும்போது அழுவதில்லை
விழும்போது அழுவதில்லை
அறுவடை முடிந்து எழும்போது அழுகிறான்

அறுவடை இல்லாது அறுபடை சென்று வேண்டுகிறான்
கழனியில் உழாது
பழனியில் அழுகிறான்

இவன் கண்ணீரின்
முகவரி அதுதான் காவிரி

நீர் கேட்க்கும்போதெல்லாம்
இவனுக்கு கா விட்டுவிட்டு இல்லை என்று கை விரிப்பதால்
இதன் பெயர் காவிரி

விண் மேகம் பொழிந்த
மழையினும் இவன்
கண்மேகம் பொழிந்த மழை
அதிகம்

கேணி கூட இவன் கானி வளர தரவில்லை பானி எனும் தண்ணி எனும் ஏணி
அதனால் இவன் பயிர் ஆவதில்லை போனி

ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை ஆறு அடிவயிற்றில் வற்றி ஏறி மிதித்தது ஏரி
குளம் இவன் குலம் காக்கவில்லை
நதியோடு இவன் விதியும் வற்றியது

இலை வளராது இவன் கவலை வளர்ந்தது

வினை விதைத்தவன்தானே வினை அறுவடை செய்ய வேண்டும் திணை விதைத்தவன் ஏன் செய்ய வேண்டும்

இவன் அறுவடை நிலவில் சுடும் ஆயாவின் வடை
இரண்டும் கனவுதான்

இவன் விட்டு பூவில் வியர்வை வாசம்
பூப்பது பூவல்ல இவன் உழைப்பு

இவன் நிலத்தில் சாய்ந்து கிடக்கும்
கதிருக்கு விசுவாசம் அதிகம்
இவன் வியர்வை கண்ணீர் இவற்றின் உப்பை சாப்பிட்டு வளர்ந்தது அல்லவா

அரசே அவன் தன் நீரைத்தானே கேட்கிறான் பெற்றுக்கொடுங்கள்
அவன் கண்ணீருக்கு முற்று கொடுங்கள்

விவசாயம் காப்போம்

எழுதியவர் : குமார் (8-Sep-18, 3:26 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : vivasaayi kanneer
பார்வை : 56

மேலே