பணமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி

நீர் தீர்ந்ததும் தூக்கி ஏறியும்
நெகிழி குப்பிகளை போலதான் சில சுற்றங்கள்...

இந்த காகித கடவுளை மதித்த
தருணத்தில் மனித மனம் குறுகத்தொடங்கி இன்று நீர்த்துபோய்விட்டது...

பணம் இருந்தால் பாசம் வரும்
பணம் இழந்தால் மோசம் தரும்...

இவன் சல்லிகாசுக்கு தேரமாட்டான் என்றவர்கள்..
இன்று சத்தியமாய் நீ இவ்வளவு உயரம் தொடுவாய் என நான் நினைத்தேன் என்று புளுகுவர்...

நம் தரம் நம்மில் இன்றி பணத்தில்
இருக்கிறது என்று எண்ணுபவர்கள்
தரம் தாழ்ந்தவர் ஆவார்...

பணமெண்ணும் சேர்ந்தாரைக்கொல்லி...
எனும் புதுமொழியும் வழக்கில் வரும்..
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற பழமொழி வழக்கொழியும்...

எழுதியவர் : சந்தோஷ் (8-Sep-18, 3:21 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 120

மேலே